உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE s.v.kamaraj CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராயபுரம் ரயில் நிலையம்

மிகப் பழமையான ரயில் நிலையம்[தொகு]

தென் இந்தியாவின் முதல் ராயபுரம் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணைக் கண்டத்தில் மிகப் பழமையான ரயில் நிலையமாகும் (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மும்பை மற்றும் தானே ரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது சென்னைக் கடற்கரை, அரக்கோணம் இடையேயான ரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் ரயில் அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது. பாரதத்தின் பழமையான ரயில் நிலையமாகும். காலத்தால் அழியாச் சின்னமாக திகழ்கிறது. இந்த நிலையம் ஆகஸ்டு 1979இல் மின்மயமாக்கபட்டது