ஹிகாரு நாகமுரா (ஆங்கில மொழி : Hikaru Nakamura, பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் இணைய ஓடையாளர் ஆவார். ஒரு சதுரங்க மேதையான இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். [1]இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின் குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.