சதுரங்க மேதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதுரங்க மேதை (chess prodigy) என்று அழைக்கப்படும் குழந்தை, அனுபவம் வாய்ந்த வயதுவந்த சதுரங்க வீரர்கள் மற்றும் சதுரங்க மாசுட்டர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் திறமை கொண்ட குழந்தையைக் குறிக்கும். சதுரங்க உலகில் அத்தகைய குழந்தைகள் மிது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். எதிர்பார்க்கப்பட்ட்து போலவே சிலர் உலக சாம்பியன்களாக மாறுகிறார்கள். மற்றவர்கள் முதியவர்களாக மாறும்போது சிறிய அளவு முன்னேற்றம் அல்லது எந்தவிதமான மேம்பாட்டையும் அடையாமல் தொலைந்து போகிறார்கள்.

பழங்கால சதுரங்க மேதைகள்[தொகு]

1837-1884 ஆண்டுகளில் வாழ்ந்த பால் மார்பியும், 1888-1942 ஆண்டுகளில் வாழ்ந்த யோசு ராவுல் கேப்பிளாங்காவும் ஆரம்பகால சதுரங்க மேதைகளாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் பனிரெண்டாவது வயதிலேயே வலிமையான சதுரங்க வீர்ர்களை வீழ்த்தி சாதனை புரிந்தனர். 1911-1992 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சாமுவேல் ரெசெவ்சுகியும் அதே நேரத்தில் தன்னுடைய ஆறாவது வயதிலேயே இதுபோலவே சதுரங்க மேதையாகத் திகழ்ந்தார். அதிகாரப்பூர்வமாக உலக சாம்பியன் பட்டம் அறிவிக்கப்படாத காலத்திலேயே சதுரங்க மேதையான மார்பி உலக சாம்பியனாகக் கருதப்பட்டார். சதுரங்க மேதையான கேப்பிளாங்கா பிற்காலத்தில் மூன்றாவது உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றார். சாமுவேல் ரெசெவ்சுகி இறுதிவரை இப்பட்டத்தை பெறாமலேயே வலிமையான ஐந்து சதுரங்க வீர்ர்கள் என்ற பட்டியலில் இடம்பிடித்து பல பத்தாண்டுகளுக்கு நிலையாக நீடித்தார்.

இளைய கிராண்டு மாசுட்டர்களின் பட்டியல்[தொகு]

ஒரு சதுரங்க வீர்ர் கிராண்டு மாசுட்டர் பட்டத்தைப் பெறும் வயது 1950 களில் சதுரங்க மேதை என அழைக்கப்படுவதற்கான அளவுகோலாக இருந்தது. தற்போது கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான தகுதியை அடைந்த நாளில் உள்ள வயது அளவு கோலாக கருதப்படுகிறது. ஏனெனில் தகுதியை அடைந்த நாளும் கிராண்டு மாசுட்டர் பட்டம் பெற்ற நாளும் ஒன்றாக இருப்பதில்லை. கிராண்டு மாசுட்டர் பட்டம் பிடே அமைப்பின் கூட்டம் நடைபெறும்போதுதான் வழங்கப்படுகிறது. குறிப்பு: கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப் பட்டபோது வீர்ர்கள் வசித்த நாடு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய வசிப்பிடம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

ஆண்டு வீரர் நாடு வயது
1950 டேவிட் புரோன்சுடீன்  சோவியத் ஒன்றியம் 26 ஆண்டுகள்
1952 திக்ரான் பெட்ரோசியன்  சோவியத் ஒன்றியம் 23 ஆண்டுகள்
1955 போரிசு சிபாசுகி  சோவியத் ஒன்றியம் 18 ஆண்டுகள்
1958 பாபி பிசர்  ஐக்கிய அமெரிக்கா 15 ஆண்டுகள் 6 மாதங்கள், 1 நாள்கள்
1991 யூடித் போல்கர்  அங்கேரி 15 ஆண்டுகள் 4 மாதங்கள் 28 நாள்கள்
1994 பீட்டர் லீக்கோ  அங்கேரி 14 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாள்கள்
1997 எட்டியின் பாக்ரோட்  பிரான்சு 14 ஆண்டுகள் 2 மாதங்கள் 0 நாள்கள்
1997 ருசுலான் போனோமாரியோவ்  உக்ரைன் 14 ஆண்டுகள் 0 மாதங்கள் 17 நாள்கள்
1999 பு சியாங்சி  சீனா 13 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாள்கள்
2002 செர்கி கர்யாகின்  உக்ரைன் 12 ஆண்டுகள் 7 மாதங்கள் 0 நாள்கள்

15 ஆவது பிறந்த நாளுக்கு முன்பே கிராண்டு மாசுட்டர் பட்டம் வாங்கியவர்களின் பெயர் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

எண். வீரர் நாடு வயது பிறந்த ஆண்டு
1. செர்கி கர்யாகின்  உக்ரைன் 12 ஆண்டுகள் 7 மாதங்கள் 0 நாள்கள் 1990
2. குகேசு டி  இந்தியா 12 ஆண்டுகள், 7 மாதங்கள் 17 நாள்கள் 2006
3. யாவோகிர் சிந்தாரோவ்  உஸ்பெகிஸ்தான் 12 ஆண்டுகள் 10 மாதங்கள் 5 நாள்கள் 2005
4. பிரஞ்ஞானந்தா இரமேசுபாபு  இந்தியா 12 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாள்கள் 2005
5. நாடிர்பெக் அப்துசேட்டோரோவ்  உஸ்பெகிஸ்தான் 13 ஆண்டுகள் 1 மாதம் 11 நாள்கள் 2004
6. பரிமராசன் நெகி  இந்தியா 13 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாள்கள் 1993
7. மாக்னசு கார்ல்சன்  நோர்வே 13 ஆண்டுகள் 4 மாதங்கள் 27 நாள்கள் 1990
8. வெய் யி  சீனா 13 ஆண்டுகள் 8 மாதங்கள் 23 நாள்கள்[1] 1999
9. பூ கியாங்சி  சீனா 13 ஆண்டுகள் 10 மாதங்கள் 13 நாள்கள் 1985
10. சாமுவேல் செவியன்  ஐக்கிய அமெரிக்கா 13 ஆண்டுகள் 10 மாதங்கள் 27 நாள்கள்[2] 2000
11. ரிச்சர்டு ரேப்பொர்ட்டு  அங்கேரி 13 ஆண்டுகள் 11 மாதங்கள் 6 நாள்கள்[3] 1996
12. தெய்மோர் ராட்ச்பொவ்  அசர்பைஜான் 14 ஆண்டுகள் 0 மாதம் 14 days 1987
13. ருசுலான் போனொமரியோவ்  உக்ரைன் 14 ஆண்டுகள் 0 மாதம் 17 நாள்கள் 1983
14. நிகால் சாரின்  இந்தியா 14 ஆன்டுகள் 1 மாதம் 1 நாள் 2004
15. அவோன்டர் லியாங்  ஐக்கிய அமெரிக்கா 14 ஆண்டுகள் 1 மாதம் 20 நாள்கள்[4][5] 2003
16. வெசுலி சோ  பிலிப்பீன்சு 14 ஆண்டுகள் 1 மாதம் 28 நாள்கள்[6] 1993
17. எட்டியென் பேக்ராட்  பிரான்சு 14 ஆண்டுகள் 2 மாதங்கள் 0 நாள்கள் 1983
18. இல்யா நைசிங்க்  உக்ரைன் 14 ஆண்டுகள் 3 மாதங்கள் 2 நாள்கள்[7] 1996
19. மேக்சிம் வேச்சியர் லாக்ராவே  பிரான்சு 14 ஆண்டுகள் 4 மாதங்கள் 6 நாள்கள்[8] 1990
20. பீட்டர் லீக்கோ  அங்கேரி 14 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாள்கள் 1979
21. யார்ச்சு கோரி]]  பெரு 14 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாள்கள்[9] 1995
22. ஆவ் யிபான்  சீனா 14 ஆண்டுகள் 6 மாதங்கள் 16 நாள்கள்[10] 1994
23. யெப்ரீ சியாங்  ஐக்கிய அமெரிக்கா 14 ஆண்டுகள் 6 மாதங்கள் 25 நாள்கள்[11] 2000
24. அணீசு கிரி  உருசியா 14 ஆண்டுகள் 7 மாதங்கள் 2 நாள்கள்[12] 1994
25. யூரி குசுபொவ்  உக்ரைன் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் 12 நாள்கள்[13] 1990
26. போக்தன் டேனியல் தீக்  உருமேனியா 14 ஆண்டுகள் 7 மாதங்கள் 27 நாள்கள்[14] 2001
27. தாரியசு சுவியர்சு  போலந்து 14 ஆண்டுகள் 7 மாதங்கள் 29 நாள்கள் 1994
28. அலிரசா பிரோசுயா  ஈரான் 14 ஆண்டுகள் 8 மாதங்கள் 2 நாள்கள் 2003
29. ஆர்யன் சோப்ரா  இந்தியா 14 ஆண்டுகள் 9 மாதங்கள் 3 நாள்கள்[15] 2001
30. நெகுயென் நெகோக் டுராங் சான்  வியட்நாம் 14 ஆண்டுகள் 9 மாதங்கள் 22 நாள்கள்[16] 1990
31. கிரில் சேவ்செங்கோ  உக்ரைன் 14 ஆண்டுகள் 9 மாதங்கள் 23 நாள்கள் 2002
32. அர்ச்சூன் எரிகாய்சி  இந்தியா 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 13 நாள்கள் 2003
33. தானில் துபோவ்  உருசியா 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 14 நாள்கள்[17] 1996
34. ரே ராப்சன்  ஐக்கிய அமெரிக்கா 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 16 நாள்கள்[18] 1994
35. பேபியானோ காருவானா  இத்தாலி 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 20 நாள்கள்[19] 1992
36. யூ யாங்யி  சீனா 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 23 நாள்கள்[20] 1994

இளைய பெண் கிராண்டு மாசுட்டர்கள் பெயர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Year Player Country Age
1978 நோனா கேப்ரின்தாசுவிலி  சோவியத் ஒன்றியம் 37 ஆண்டுகள்
1984 மேயா சிபுர்தனிட்சு  சோவியத் ஒன்றியம் 23 ஆன்டுகள்
1991 சுசன் போல்கர்  அங்கேரி 21 ஆண்டுகள்
1991 யூடித் போல்கர்  அங்கேரி 15 ஆண்டுகள் 4 மாதங்கள்
2002 கொனேரு ஹம்பி  இந்தியா 15 ஆன்டுகள் 1 மாதங்கள்
2008 ஆவ் யிபான்  சீனா 14 ஆண்டுகள் 6 மாதங்கள்[21]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wei Yi has become the youngest GM in the world பரணிடப்பட்டது பெப்பிரவரி 28, 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. "Youngest-ever American Chess Grandmaster crowned in St. Louis". 23 November 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  3. "Richard Rapport Becomes Hungary's Youngest Grandmaster - Chessdom". players.chessdom.com. Archived from the original on 7 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Abdusattorov (13) Second Youngest GM In History". 31 October 2017. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  5. Polgar, Susan (30 May 2017). "Awonder Liang has earned his final GM norm at 14 years and 1 month! Congratulations to Awonder and the Liang family! @USChess @websterupic.twitter.com/hecjYDMbQz". பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  6. 14-year-old Filipino is newest grandmaster பரணிடப்பட்டது சனவரி 17, 2008 at the வந்தவழி இயந்திரம்
  7. "GM title for Illya Nyzhnyk in Groningen". 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  8. "British and French championships". 20 August 2005. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  9. Cori achieved his final GM norm in October 2009, but he crossed the 2500 rating mark during a tournament in January 2010
  10. Hou Yifan – the youngest female grandmaster in history (Chessbase, December 8, 2008) gives 14-6-2, but this cannot be correct because that date (August 29) was the first day of the Women's World Chess Championship 2008. Chessbase appears to have used the first day of the championship, instead of the day she qualified for the final and earned her 3rd norm (September 12).
  11. Ramirez, Alejandro (1 June 2015). "Jeffery Xiong rocks Chicago". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  12. Anish Giri, 14, makes his final GM norm ChessBase January 31, 2009
  13. "Yuriy Kuzubov joins the mini-GM club". 7 September 2004. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  14. "The chess games of Bogdan-Daniel Deac". www.chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  15. Staff, Scroll. "Delhi's Aryan, 14, Secures Grandmaster Title". பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
  16. Staff, Scroll. "The world's second-youngest grandmaster". பார்க்கப்பட்ட நாள் 2018-01-14.
  17. Satrapa, James (2011-08-07). "Daniil Dubov, grandmaster at fourteen". ChessBase.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2011.
  18. Ray Robson is the new youngest GM பரணிடப்பட்டது அக்டோபர் 16, 2009 at the வந்தவழி இயந்திரம்
  19. "Who was the future GM? Fabiano Caruana, Italy's top grandmaster!". 18 October 2007. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  20. "Chess prodigies and mini-grandmasters". 10 January 2006. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.
  21. WWCC - Nalchik 2008 - and now there are just four!, FIDE web site, September 9, 2008

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்க_மேதை&oldid=3776462" இலிருந்து மீள்விக்கப்பட்டது