பயனர்:Kishoprasha/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவிந்தசாமி கிசோகுமார்[தொகு]

கோவிந்தசாமி கிசோகுமார் ( பிறப்பு: மார்ச், 25, 1987) இலங்கை, மலையகத் தமிழ்க் கவிஞரும், நடிகர், நாடக எழுத்தாளர்,இலக்கிய ஆய்வாளர் மற்றும் ஆசிரியர் ஆவார்.இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். 2000 மாம் ஆண்டுக்கு பின்னர் தன்னுடைய கலை இலக்கிய பணிகளை ஆரம்பித்து செயற்பட்டு கொண்டிருப்பவர்.

கோவிந்தசாமி கிசோகுமார் இலங்கையின் மலையகத்தில் நுவரெலிய மாவட்டம், கொட்டகலை நகரிற்கு இற்கு அருகில் உள்ள பெரிய மண்வெட்டியூரில் பிறந்தார். கொட்டகலை டிறைட்டன் தமிழ் வித்யயாலயத்திலும் ,கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

பிறகு பதனை ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு தெரிவாகி தற்போது நு / மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரயராக கடமை புரிகிறார். மூங்கில் கூடை என்பது இவருடைய முக்கியமான கவிதை நூலாகும் . இந்த கவிதை நூலுக்காக 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாண சாகித்ய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kishoprasha/மணல்தொட்டி&oldid=2495655" இலிருந்து மீள்விக்கப்பட்டது