மலையக இலக்கியம்
Jump to navigation
Jump to search
இலங்கையின் மலையகப் பகுதியில் பெரும்பாலும் வசிக்கும் தமிழ் மக்களின் இலக்கிய ஆக்கங்கள் மலையக இலக்கியம் எனப்படும். மலையகத் தமிழர் பெரும்பாலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்டவர்களது சந்ததியினராவர். இந்தப் பின்னணி காரணமாக மலையக இலக்கியமானது மற்றைய நிலைப்பிரிவுகளிலிருந்து வெளிப்பட்ட இலக்கியத்திலிருந்து தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. மலையக இலக்கியம் மலையக மக்களின் பொருளாதார, சமூக, கல்வி, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து பெரும்பாலும் அமைகின்றது. சி. வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் மலையக இலக்கியத்தில் குறிப்பிடத்தகவர்கள்.
தொடக்க காலப் படைப்புகள்[தொகு]
- கோப்பிக் கிருஷிக் கும்மி - 1869 - ஆபிரகாம் யோசப் [1] - A Cummi poem on Coffee planting (in Tamil) with an English translation
- தேயிலைக்குருஷக்கும்மி
- தேயிலைக் கொய்யும் தெம்மாங்கு - [2]
- சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி - 1937
- உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு
நூலகம் திட்டத்தில் மலையக இலக்கியம் தொடர்பான நூல்கள்[தொகு]
- மலையகத் தமிழ் இலக்கியம் - க. அருணாசலம்
- மலையக வாய்மொழி இலக்கியம் - சாரல்நாடன்
- மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் - சாரல்நாடன்
- மலைகமும் இலக்கியமும் - அந்தனி ஜீவா
மேற்கோள்கள்[தொகு]
- ↑ தெளிவத்தை யோசப். "மலையக இலக்கியத்துக்கு கிறித்தவர்களின் பங்களிப்பு". மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு. 3 சனவரி 2017 அன்று அணுகப்பட்டது..
- ↑ ஆ. சிவசுப்பரமணியன். "தமிழில் குறுநூல்கள்". பார்த்த நாள் 3 சனவரி 2017.