பயனர்:CM Kandiyar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டியர்:[தொகு]

இராசகண்டியன், இராசராச சோழனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்றாகும். இராசகண்டியன், இராசகண்டியர் என்று உருமாறி இன்று கண்டியர் என்று அழைக்கப்படுகின்றனர். செம்பியன் மரபில் வந்தவர்கள். கண்டியூரென்னும் (தேவாரம் பெற்ற) சிவதலத்தையும், கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு , வடுவூர்அய்யம்பேட்டை என்னும் ஊர்களையும் உருவாக்கி ஆண்டவர்கள். இவர்க ளின் கண்டியூர் அரண்மனை சோழநாட்டு நித்தவிநோத வளநாட்டு கிழார்க் கூற்றத்து ஆயிரத்தளி அரண்மனை என்ற பெயருடையது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244) சோழர்களை வென்று இந்த அரண்மனையில் தான் முடிசூடிக்கொண்டான் என்பது வரலாறு. இராசராச சோழன் ஈழத்தை வென்று பண்டைய தலைநகரான அணுராதபுரத்தை அழித்த பின் சனநாதமங்கலம் என்ற புதிய ( இன்றைய பொலன்னருவா) தலைநகரை உருவாக்கினான். நாக நாடு, வன்னி, திரிகோணமலை, பொலன்னருவா மற்றும் அணுராதபுரம் போன்ற இடங்களே சோழ

ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (மகாவம்சம்) இக் கால கட்டத்தில் இலங்கையின் தென்பகுதி சோழனின் ஆட்சிக்கு உட்படவில்லை. தொடர்ந்து சிங்கள மன்னர்களின் ஆட்சியில் இருந்ததால் இடையூராக இருந்தது. இந்நிலையை மாற்றி இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் கண்டியூர் இளவரசன் இராசகண்டியன். இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும். உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு.இப்போதும் கண்டியர் என்ற கள்ளர் குல பட்டம் தாங்கியவர்கள் தஞ்சை , திருச்சி, நாகை, திருவாரூர் , புதுக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:CM_Kandiyar/மணல்தொட்டி&oldid=2891284" இலிருந்து மீள்விக்கப்பட்டது