பம்பலேஸ்வரி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்மிகு பம்பலேஸ்வரி தேவி கோயில், இந்திய மாநிலமான சத்தீஸ்கரிலுள்ள ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள டோங்கர்கட்டில் உள்ளது. இந்த கோயில் மலையுச்சியில் அமைந்துள்ளது. தசரா திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.[1]

மலையிலுள்ள கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட படம்

சென்றடைவது[தொகு]

இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைநகரான ராஜ்நந்துகாவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்விரு நகரங்களில் இருந்தும் வந்து செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டோங்கர்கட்டில் தொடர்வண்டி நிலையம் உள்ளது.

சான்றுகள்[தொகு]