பன்சன் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்சன் வினை (Bunsen reaction) என்பது தண்ணீர், கந்தக டைஆக்சைடு மற்றும் அயோடின் ஆகியன வினைபுரிந்து கந்தக அமிலம் மற்றும் ஐதரசன் அயோடைடு உருவாகும் வேதி வினையைக் குறித்து விவரிக்கிறது.

2H2O + SO2 + I2 → H2SO4 + 2HI

ஐதரசன் உற்பத்தி செய்யும் கந்தக அயோடின் சுழற்சியில் இவ்வினையே முதல் படிநிலையாகும். விளைபொருட்கள் இரண்டு நீர்க்கரைசல் அடுக்குகளாக பிரிந்து நிற்கின்றன. கந்தக அமிலம் மேல் அடுக்கில் மிதந்தபடியும், ஐதரசன் அயோடைடும் வினையில் ஈடுபடாத அயோடினும் சேர்ந்த கலவை கீழ்ப்பகுதியிலும் பிரிந்துள்ளன[1]. பொதுவாக இவ்விரண்டு அடுக்குகளும் கலக்காதது போலத் தோன்றினாலும் சிறிதளவு கந்தக அமிலம் ஐதரசன் அயோடைடுடனும், சிறிதளவு அயோடின் கந்தக அமிலத்துடனும் கலந்துதான் இருக்கும். இதனால் தேவையில்லாத பக்க வினைகள் நிகழ்கின்றன. ஒரு வினையில் கந்தகம் வீழ்படிவாக்கப்படுகிறது. இதனால் வினை நிகழ் கலனுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது[2]. 1853 ஆம் ஆண்டில் இராபர்ட் புன்சன் இவ்வினையைக் கண்டறிந்ததால் வினைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.[3]

காரல் பிசர் தரம்காணல் ஆய்வுக்கு இவ்வினையே அடிப்படையாகும்.

போதுமான அளவு உயர் வெப்பநிலையில் அடர் கந்தக அமிலம், ஐதரசன் அயோடைடுடன் வினைபுரிந்து அயோடின், கந்தக டை ஆக்சைடு, தண்ணீர் முதலானவற்றைக் கொடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.[2] நைட்ரசன் மற்றும் ஐதரசன் சேர்ந்து அமோனியா உருவாதல் போன்ற பல வினைகள் மீள் வினைகளாகும். லீ சாட்டிலியர் தத்துவத்தின் படி தேவையான விளை பொருளை நீக்குவதன் மூலமாக வேதிச் சமநிலையைக் கட்டுப்படுத்தி சாதகமான பொருட்களை பெறமுடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zhang, Yanwei, Pingan Peng, Zhi Ying, Qiaoqiao Zhu, Junhu Zhou, Zhihua Wang, Jianzhong Liu, and Kefa Cen (3 February 2014). "Experimental Investigation on Multiphase Bunsen Reaction in the Thermochemical Sulfur–Iodine Cycle". Industrial & Chemistry Engineering Research (American Chemical Society) 53 (8): 3021–3028. doi:10.1021/ie4038856. http://pubs.acs.org/doi/abs/10.1021/ie4038856?journalCode=iecred. பார்த்த நாள்: 2 January 2015. 
  2. 2.0 2.1 Guo, H.F., P. Zhang, Y. Bai, L.J. Wang, S.Z. Chen, and J.M. Xu (3 June 2009). "Continuous purification of H2SO4 and HI phases by packed column in IS process". International Journal of Hydrogen Energy (Elsevier Ltd.) 35 (7): 2837. doi:10.1016/j.ijhydene.2009.05.009. http://www.sciencedirect.com/science/article/pii/S0360319909007071#. பார்த்த நாள்: 2 January 2015. 
  3. Sella, Andrea (3 February 2012). "Karl Fischer’s titrator". Chemistry World. Royal Society of Chemistry. பார்த்த நாள் 2 January 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சன்_வினை&oldid=1984905" இருந்து மீள்விக்கப்பட்டது