பனையன்னூர்காவு தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனையன்னூர்காவு தேவி கோயில் கேரளாவில் பம்பா நதிக்கரையில் அமைந்துள்ள கோயில் ஆகும். இது இம்மாநிலத்தில் உள்ள முக்கிய திரிபுரசுந்தரி கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. [1]ஆலப்புழையில் உள்ள இப்பகுதி சுட்டநாடு என்றழைக்கப்படுகிறது. பின்னர் பரசுராமர் அதை புதுப்பித்தார். வசிஷ்டர் மூல மந்திரங்களை உச்சரித்து, புதிய மூலவரை அமைத்தார்.

பரசுராமர் ஆந்தி மாநிலத்திலுள்ள பத்ராசலத்திலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து திரிபுரசுந்தரியின் வேத, மந்திர பூசைகளை நடத்த ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு ரகசிய மூல மந்திரங்களைக் கூறினார்.அதே பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு மந்திரங்களும், பூசைகளும் தற்போதும் செய்யப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]