பனாரசி தாசு
பனாரசி தாசு Banarasi Das | |
---|---|
11ஆவது உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலகம் | |
பதவியில் 28 பிப்ரவரி 1979 – 17 பிப்ரவரி 1980 | |
முன்னையவர் | இராம் நரேசு யாதவ் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உட்டாரவ்லி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 18 சூலை 1912
இறப்பு | 3 ஆகத்து 1985 இந்தியா | (அகவை 73)
அரசியல் கட்சி | சனதா கட்சி |
பனாரசி தாசு (Banarasi Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாபு பனாரசி தாசு என்ற பெயராலிவர் பிரபலமாக அறியப்பட்டார். 1912 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதியன்று பனாரசி தாசு பிறந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தார்.சனதா கட்சியை சேர்ந்தவராக உத்தரப்பிரதேச மாநில அரசியலில் செயல்பட்டார்.
தொழில்
[தொகு]பனாரசி தாசு ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பலமுறை சிறை சென்றார். 1977 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அபூர் அல்லது குர்ச்சாவிலிருந்து சனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு இடங்களுக்கும் பனார்சி தாசு என்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வரை முதலமைச்சராக இருந்தார். சனதா கட்சி பிளவுபட்டபோது சரண் சிங் அணியில் சேர்ந்தார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். [2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பனாரசி தாசு உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில் உள்ள உடராவ்லியில் பிறந்தார். பனாரசி தாசுக்கு திருமணமாகி ஐந்து மகன்களும் ஐந்து மகள்களும் பெற்றார். இரண்டு மகன்கள் இவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றினர். மூத்தவரான அரேந்திர அகர்வால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இளைய மகன் மறைந்த டாக்டர் அகிலேசு தாசு குப்தா [3] முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பகுசன் சமாச்சு கட்சியின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். மன்மோகன் சிங் அரசாங்கத்தில் மாநில அமைச்சராகவும் இருந்தார். [4]
மரபு
[தொகு]2013 ஆம் ஆண்டில் பனாரி தாசு இடம்பெறும் இந்திய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. பாபு பனாரசி தாசு பல்கலைக்கழகம், லக்னோ மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பாபு பனாரசி தாசு உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uttar Pradesh Assembly Election Results in 1977".
- ↑ "Uttar Pradesh Assembly Election Results in 1980".
- ↑ Detailed Profile – Dr. Akhilesh Das Gupta – Members of Parliament (Rajya Sabha) – Who's Who – Government: National Portal of India பரணிடப்பட்டது 8 நவம்பர் 2018 at the வந்தவழி இயந்திரம். Archive.india.gov.in. Retrieved on 8 November 2018.
- ↑ Cong MP quits party, attacks Rahul `coterie`. Sify.com. Retrieved on 8 November 2018.
புற இணைப்புகள்
[தொகு]- குறுகிய சுயசரிதை பரணிடப்பட்டது 19 சூலை 2020 at the வந்தவழி இயந்திரம்</link>
- உத்தரபிரதேச முதலமைச்சர்கள்