பந்தாவ்கர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பந்தாவ்கர் கோட்டை
பகுதி: பந்தாவ்கர் தேசியப் பூங்கா
உமரியா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
Fort Bandhavgarh National Park Madhya Pradesh India.jpg
மத்தியப் பிரதேசம்
பந்தாவ்கர் கோட்டை is located in மத்தியப் பிரதேசம்
பந்தாவ்கர் கோட்டை
பந்தாவ்கர் கோட்டை
ஆள்கூறுகள் 23°40′58.96″N 81°2′7.49″E / 23.6830444°N 81.0354139°E / 23.6830444; 81.0354139
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசாங்கம்
மக்கள்
அநுமதி
இல்லை
நிலைமை Dilapidated
இட வரலாறு
கட்டிய காலம் 10ஆம் நூற்றாண்டு
கட்டிடப்
பொருள்
கற்கோட்டை
உயரம் 811 மீட்டர்கள் (2,661 ft)

பந்தாவ்கர் கோட்டை இந்தியாவின்மத்தியப் பிரதேச மாநிலத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தாவ்கர் மலையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 811 மீட்டர் உயரத்தில் பந்தாவ்கர் தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. சாய்ந்த பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்ட பல சிறிய மலைகளால் இது சூழப்பட்டுள்ளது. உள்நாட்டில் 'போஹெரா' என்று அழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்குகள் சிறிய, சதுப்பு நில புல்வெளிகளில் முடிவடைகின்றன. இந்தியாவில் ஆபத்தான பல கழுகு உயிரினங்களுக்கு இந்த கோட்டை இருப்பிடமாக உள்ளது.

தோற்றம்[தொகு]

பந்தாவ்கர் கோட்டை எப்போது கட்டப்பட்டது என்பதைக் காட்ட எந்த பதிவுகளும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. மேலும் இது பற்றிய குறிப்புகள் பண்டைய புத்தகங்களான "நாரத்-பஞ்ச் ராத்ரா" மற்றும் " சிவ புராணம் " ஆகியவற்றில் உள்ளன. கோண்ட் பேரரசின் ஆட்சியாளர்களால் பந்தாவ்கர் கோட்டை கட்டப்பட்டது என்று அப்பகுதி நாட்டுப்புறக் கதைகள் தெரிவிக்கின்றன. கோண்ட் மன்னர்களின் சந்ததியினர் இன்னும் கோட்டைக்கு அருகில் வசிக்கின்றனர். கோண்ட் மன்னர்கள் 12 தலாப் எனும் சிறு குளங்களை கட்டினர், அவற்றில் சில மட்டுமே தற்போது உள்ளன. இந்த கோட்டையின் கட்டுமானமும் கட்டிடக்கலையும் கோண்ட் மன்னர்கள் கட்டிய பிற கோட்டைகளைப் போன்று அமைந்துள்ளது.

பந்தாவ்கர் கோட்டையின் மலையிலிருந்து வேன்கங்கா நீரோடை உருவாகிறது. கோண்டி மொழியில், வேன் என்பது குடும்பப்பெயர் என்றும் கங்கா என்பது தூய்மையான நீரோடை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. கோண்ட் மன்னர்களின் குடும்பப்பெயரான பாண்ட்ரோ "வேன்கங்கா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பந்தாவ்கர் கோட்டை அதன் பெயரை இப்பகுதியின் மிக முக்கியமான மலையடிவாரத்தில் இருந்து பெற்றது. இது இலங்கையைக் கண்காணிக்க இராமர்தனது சகோதரர் இலட்சுமணருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே பந்தாவ்கர் பெயர் பெற்றது.(பந்தாவ் என்றால் சகோதரர், கர் என்றால் கோட்டை).

கோசாம்பி மற்றும் பர்குட் இடையே பயணிக்கும் வணிகர்களுக்கான வணிக மையமான பந்தாவ்கர் கோட்டை பர்தாவதி என்றும் அழைக்கப்பட்டது. கலாச்சுரி வம்சத்தின் போது இது "ஹைஹே க்ஷேத்ரா" என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்தைப் பயன்படுத்திய வாகாடக வம்சத்தால் பல்வேறு கல் எழுத்துக்கள் எழுதப்பட்டன. கற்களை வெட்டுவதன் மூலம் அந்த இடத்தை அவர்கள் வாழ்வாதாரமாக்கினர். பந்தாவ்கருக்கு அருகிலுள்ள பமானியா மலையில் கோட்டையின் சில இடிபாடுகள் உள்ளன. மேலும் பல சிற்பங்களும் நாணயங்களும் பந்தாவ்கர், பிஜாரியா, மாலாவிற்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ளன. அவை இராச்சியத்தின் பொருளாதார மற்றும் கலை நிலைமையை நிரூபிக்கின்றன. கரண் தியோவின் ஆட்சியில் (விக்ரம் சம்வத் 1245-1260), கஹோரா இராச்சியத்தின் தெற்குப் பகுதியின் தலைநகராக பந்தாவ்கர் இருந்தது.

மீன் மற்றும் ஆமை போன்ற விஷ்ணுவின் ( அவதாரம் ) மறுபிறப்புகளை சித்தரிக்கும் சில சிலைகள் உள்ளன. மலையில் ராணி தலாப் (இராணிகள் குளம்) என்ற குளம் மற்றும் தற்கொலை புள்ளி என்று ஒரு பார்வைப் பகுதி உள்ளது.

கோட்டையிலிருந்து திரும்பிச் செல்லும் வழியில் விஷ்ணுவின் பிரமாண்டமான சிலை துயில் கொள்ளும் நிலையில் காணலாம். இது சேஷ் ஷாய் என்று அழைக்கப்படுகிறது. பந்தாவ்கர் என்ற வார்த்தையின் அர்த்தமாக இலட்சுமண் கோட்டை மற்றும் செதுக்கப்பட்ட கல் ஷேஷ் ஷாய் ஆகியவை இந்த பெயரின் தோற்றத்திற்கு மேலதிக ஆதாரங்களையும் வழங்குகிறது.

வரலாறு[தொகு]

கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மெளரியர்கள், 3 ஆம் -5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாகாடகா ஆட்சியாளர்கள், 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கர்கள், 10 ஆம் நூற்றாண்டிலிருந்து கலாச்சுரிஸ் என பல்வேறு வம்சாவளியினர் கோட்டையினை ஆட்சி புரிந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 1617 வரை, பாகேல்கள் பொறுப்பேற்றனர். பந்தாவ்கரிலிருந்து, மகாராஜா விக்ரமாதித்ய சிங் தனது தலைநகரை ரேவாவுக்கு மாற்றினார். கடைசியாக வசித்தவர்கள் 1935 இல் கோட்டையை விட்டு வெளியேறினர்.

குறிப்புகள்[தொகு]

  • எல்.கே.சவ்தாரி & சபி அக்தர் கான்: பந்தவ்கர்-புலியின் கோட்டை, வைல்ட் அட்லஸ் புக்ஸ், போபால், 2003
  • ஷாபாஸ் அகமது: நீண்ட காலமாக வாழும் புலி, அச்சு உலகம், அலகாபாத், 2001
  • குல்சார் சிங் மார்க்கம்: கோண்ட்வானா கே கர் தர்ஷன், போபால், 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=பந்தாவ்கர்_கோட்டை&oldid=2885507" இருந்து மீள்விக்கப்பட்டது