பத்கரீத்சா (Podgorica, /ˈpɒdɡəriːtsə/POD-gorr-ee-tsə;[2] நகரம் மொண்டெனேகுரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது. இது மொண்டெனேகுரோவிலேயே பெரியதும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டீட்டோகிராது (Titograd) என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள சீட்டா (Zeta) என்ற பகுதியில் வளமான பியெலொப்வில்ச்சி என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா மற்றும் மொராக்கா என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வளமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 156,169 என அறியப்படுகிறது. மொண்டெனோகுரோவின் நிலப்பகுதியில் 10.4% மக்கள்தொகையில் 29.9% (சதவீதம்)மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.