பட்டுக்குடி பசுபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுக்குடி பசுபதீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள பட்டுக்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

காவிரியின் வட கரையிலும், கொள்ளிடத்தின் தென்கரையிலும் உள்ளது. [1] வடகுரங்காடுதுறை கோயிலுக்கு வடக்கேயும், கணபதி அக்ரகாரம் கணபதி கோயிலுக்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் பசுபதீசுவரர் ஆவார். இறைவி மங்களாம்பிகை. இங்கு நடைபெறுகின்ற சத்ரு சம்கார பூசை மிகவும் சிறப்பு பெற்றதாகும். [2]

முருகன் கோயில்[தொகு]

சிவன் கோயிலாக இருந்தாலும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர். முருகன் இங்கு வள்ளிதேவசேனையுடன் உள்ளார்.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலின் குடமுழுக்கு ஆவணி மாதம் 7ஆம் நாள் 23 ஆகத்து 2018 அன்று நடைபெற்றது. [3]

மேற்கோள்[தொகு]