பட்டுகொண்டா அப்பால நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுகொண்டா அப்பால நாயுடு (Baddukonda Appala Naidu) (பிறப்பு 1975), ஆந்திர பிரதேச அரசியல்வாதியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நாயுடு 1975 ஆம் ஆண்டு விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள தென்கடா மண்டலத்தில் உள்ள மொபடா கிராமத்தில் பிறந்தார். இவர் ஆந்திர மாநில அமைச்சர் போட்சா சத்தியநாராயணாவின் உறவினர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

நாயுடு, 2007-2009 காலகட்டத்தில் விஜயநகர மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தார். இவர் 2009 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றார். 2014ல் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பதிவாடா நாராயணசாமி நாயுடுவிடம் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நெல்லிமர்லா (சட்டமன்றத் தொகுதி) யில் இருந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Election Results 2019".
  2. "Baddukonda Appalanayudu Biodata". 24 March 2020.