உள்ளடக்கத்துக்குச் செல்

படிமப் பதிவு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிம பதிவு முறை

படிமப் பதிவு முறை (Image Registration) என்பது பல்வேறு தொகுப்புகளான தரவை ஒரே ஆள்கூற்று முறைமைக்கு மாற்றுவதாகும். அத்தரவானது, பல்வேறு புகைப்படங்களாகவோ, பல்வேறு உணரிகளின் வெளியீடுகளாகவோ, பல்வேறு நேரங்களிலோ அல்லது பல்வேறு பரிமானங்களிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். [1] இப்படிம பதிவு முறையானது, படிமங்களை கணினிமயமாக்குதல் (computer vision), மருத்துவ படிமம், இராணுவம் (தானியங்கி தாக்குதல் அடையாளம் காணல்), மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. வெவ்வேறு அளவுகளில் உள்ள மற்ற படிமங்களுடன் ஒப்பீடு செய்வதற்கும், அதனோடு ஒருங்கிணைக்கவும் பதிவு அவசியமாகிறது.

படிமமுறை வகைப்பாடு[தொகு]

செறிவு சார்ந்த முறை மற்றும் வசதி சார்ந்த முறை[தொகு]

பல்வேறு வகையான படிமமுறைகள் இருந்தாலும், பெரும்பாலானவை செறிவு சார்ந்த முறை அல்லது வசதி சார்ந்த முறையையே பயன்படுத்தப்படுகிறது.

உருமாற்ற மாதிரிகள்[தொகு]

படிமப் பதிவில் உருமாற்ற மாதிரிகள் முக்கிய பங்குவகிக்கிறது.

நிலையற்ற தன்மை[தொகு]

சில சமயங்களில் படிமங்களை பதிவு செய்யும் பொழுது, தற்காலிக இடம் சார்ந்த நிலையற்ற தன்மை நிலவுகிறது. மருத்துவ போன்ற உயிர் சம்பந்தமான துறைகளில் இவ்வாற நிலையற்ற தன்மை ஏற்படுவதால் பிணக்குகள் (சிக்கல்) அதிகரிக்கும்.

பயன்பாடுகள்[தொகு]

படிம பதிவு முறை பல்வேறு துறைகளில் பல்வேறு சேவைகளுக்காக பயன்படுகிறது. நிலப்படவரைவியல் துறையில் தொலையுணர் கருவி எடுக்கும் படிமங்களை கணினியில் பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முக்கியமான பணிகளுக்காக பயன்படுவதால், இதற்கான நிலையான நெறிமுடையை சிரமமான காரியமாகும். ஆயினும், சில பொதுவான செயல்கள் அனைத்து துறையினருக்கும் பொருந்தும்.

மருத்துவ படிம பதிவு முறையானது பெரும்பாலும் உறுதியற்ற உருமாற்றம் (elastic (also known as nonrigid) registration) வாயிலாகவே நடைபெறுகிறது, ஏனெனில் ஒரே நோயளிக்கு பல முறையோ அல்லது, நோயின் தாக்கத்திற்கு (கட்டிகள், புற்றுநோய் போன்ற காரணங்களினால்) ஏற்பவும் மூச்சுக்காற்று விடும்பொழுதும், உள்ளிழுக்கும் பொழுதும் படிமங்களின் உருவமும் அளவுகளும் மாற்றமடையும். இவ்வாறு உறுதியற்ற உருமாற்ற பதிவுமுறையினை பயன்படுத்தும் மருத்துவ படிமங்கள் நோயாளியின் தரவு உட்பட அனைத்தையும் உள்ளடக்கியவை நரம்பியல் படிமங்களின் ஆய்வில், உடற்கூறியல் படிமத்தொகுப்பில் (anatomical atlas) பயன்படுத்தப்படும்.

படிம பதிவு முறையானது, விண்வெளியில் புகைப்படங்கள் எடுப்பதற்கும், அவற்றை சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் பயன்படுகிறது. தானாகவோ அல்லது மனித உள்ளீடுகளால் பெறப்பட்ட கட்டுப்பாட்டு புள்ளிகளை (control points) கொண்டு கணினியானது, ஒரு படிமத்தினை அடிப்படையாகக் கொண்டு, பிற படிமங்களுக்கு உருமாற்றத்தை செயல்படுத்துகிறது.

படிம பதிவு முறை, படிமங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிழற்பட கருவி மற்றும் நிழற்பட கருவியுள்ள நகர்பேசிகளில் இப்படிம பதிவுமுறை பல்வேறு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Lisa Gottesfeld Brown, A survey of image registration techniques (abstract), ACM Computing Surveys (CSUR) archive, Volume 24 , Issue 4, December 1992), Pages: 325 - 376

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Image registration
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பதிவு_முறை&oldid=3273544" இலிருந்து மீள்விக்கப்பட்டது