உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சுவெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை பஞ்சு வெட்டும் பொருட்கள்

பஞ்சுவெட்டல் (ஆங்கிலம்:carding) என்றால் அசுத்தாமான பஞ்சினை, நெசவுக்கு ஏற்றவாறு சுத்தம் செய்தல் செய்முறையைக் குறிக்கும் சொல்லாகும். பருத்தியை அரைத்துக் கொட்டையை நீக்கியபின், கிடைக்கும் பஞ்சானது, ஒருவித ஒழுங்குமில்லாமல் துசும்புகளாகச் சுருண்டிருக்கும். மேலும, உடைந்த பருத்திக்கொட்டை, உலர்ந்த இலை, தூசு முதலிய அசுத்தங்களும் அப்பஞ்சில இருக்கும். இவைகளை நீக்குவதுடன், துசும்புகளைப் பிரித்து நீட்டிவிட்டு, அவைகளை இணையாகவும், ஒழுங்காகவும் அமையச் செய்வதே, பஞ்சுவெட்டலின் முக்கிய நோக்கமாகும்.[1]

நூல் நூற்பதற்கு முன்னர்ச் செய்ய வேண்டிய பல வேலைகளில் இதுவும் ஒன்று. எனவே, பண்டைக்கால முதலே பஞ்சுவெட்டல் நடைபெற்று வந்தது. ஆனால், பஞ்சுவெட்டும் முறை நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.

பஞ்சுவெட்டின் கை செய்முறைகள்

[தொகு]
கை பஞ்சுவெட்டல்: நிகழ்படம்

கீழ்கண்ட முறைகள் மூலம் பஞ்சுவெட்டானது, கையினால் செய்யப்படுகிறது.

  1. கை துனாயி முறை : தொடக்ககாலத்தில் கையினாலேயே, துசும்புகளை நீட்டிவிட்டு இணையாக்கினர். இது கை துனாயி முறை எனப்படும்.
  2. கத்தி துனாயி முறை : பின்னர், மூங்கில் கத்தியைக் கொண்டு பஞ்சு வெட்டினர். இது கத்தி துனாயி முறை எனப்படும்.
  3. தனுசு துனாயி முறை : இதன் பின்னர், மூங்கில் வில்லினால் பஞ்சு வெட்டினர். இது தனுசு துனாயி முறை எனப்படும். தனுசு என்ற வடமொழிக்கு, வில் என்பது பொருளாகும். மூங்கில் சிம்பைச் சீவி, இரு முனைகளிலும், காடி(சிறு பள்ளமான வெட்டு) வெட்டி, முறுக்கேறிய நூலை, இக்காடிகளில் இழுத்துக்கட்டி, இம்மூங்கில் வில்லை தயாரிக்கிறார்கள். பச்சையான இலையைக கொண்டு நூலுக்குப் பசைபோட்டு, உலர்ந்த பின் சுத்தம் செய்த பஞ்சைப் பரப்பி, அதன் மேற்பரப்பனருகே நூல் இருக்குமாறு வில்லைப் பிடித்துக் கொண்டு, வலக்கை விரலால் நூலைச் சுண்டிவிட்ட வண்ணம் இருக்க வேண்டும். நூலைச் சுண்டுவதால், அது அதிர்ந்து, அருகிலுள்ள பஞ்சின் துசும்புகளை உடைத்து, நீட்டி இணையாக அமையுமாறு செய்கிறது. மெல்லிய நூலை நூற்க, தனுசு துனாயி முறையில் பஞ்சு வெட்ட வேண்டும்.
  4. கைவில் முறை : தேக்க மரத்தினாலான வில்லில் நரம்பைக் கட்டி, மரத்தாலான பிடியினால், நரம்பைச் சுண்டிவிட்டுப் பஞ்சு வெட்டுதல், கைவில் முறை எனப்படும். இம்முறையில், மிகுதியான பஞ்சைக் குறைந்த நேரத்தில் வெட்ட முடியும்.

எந்திரமுறையில் பஞ்சுவெட்டல்

[தொகு]
பஞ்சுவெட்டல் எந்திரம் செயற்படுவதைக் காட்டும் நிகழ்படம்

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சேம்சு ஃஆர்கிரீவ்சு (James Hargreaves), டேனியல் போர்ன் (Daniel Bourn), லூயி பவுல் (Lewis Paul) ஆகியோரின் முயற்சியால், பஞ்சுவெட்டும் எந்திரம் தோன்றியது, 1773 - 1775 ஆம் ஆண்டுகளில், சர் ரிச்சர்டு ஆர்க்ரைட்டு(Sir Richard Arkwright) என்ற ஆங்கிலேயர், தானியங்கி பஞ்சுவெட்டும் எந்திரத்தை அமைத்தார். அதன் பின்னர்ப் பஞ்சுவெட்டும் எந்திர அமைப்பில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தனர். அதனால் முன்னேற்றம் ஏற்பட்டாலும், ஆர்க்ரைட்டு அமைத்த பஞ்சுவெட்டும் எந்திரத்தின் அடிப்படையான தத்துவம், அமைப்பு முதலியன இன்னும் மாறாமல் உள்ளன என்பது குறிப்பிடதகுந்ததாகும்.

ஊடகங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yilmaz, Nasire Deniz; Powell (2005). "The Technology of Terry Towel production". Journal of Textile and Apparel, Technology and Management (North Carolina Stare University) 4 (4). http://www.tx.ncsu.edu/jtatm/volume4issue4/Articles/Yilmaz/Yilmaz_full.pdf. 

துணைநூல்கள்

[தொகு]
  • Collier, Ann M (1970), A Handbook of Textiles, Pergamon Press, p. 258, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-018057-4
  • Hills, Richard Leslie (1993), Power from Steam: A History of the Stationary Steam Engine, Cambridge University Press, p. 244, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-45834-4, பார்க்கப்பட்ட நாள் January 2009 {{citation}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: extra punctuation (link)

இதையும் காணவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சுவெட்டல்&oldid=3782603" இலிருந்து மீள்விக்கப்பட்டது