பங்குனிப் பட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்குனிப் பட்டம் அல்லது ஜயத் பயிர் பருவம் ( Zaid crops) என்பது இந்தியத் துணை கண்டத்தில், வேளாண்மைக்கு பருவ மழைக்காலத்திற்கு காத்திருக்க வேண்டிய தேவை இல்லாத பாசன வசதி உள்ள நிலங்களில் பயிரிப்படும் பட்டமாகும். ஆடிப்பட்டம் மற்றும் மாசிப்பட்டம் போன்றவை முதன்மையாக பருவ மழையை நம்பிய சாகுபடி காலமாகும். ஆனால் இந்தப் பங்குனிப் பட்டமானது மழையற்ற மார்ச் முதல் சூன் வரையிலான குறுகிய காலத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஆகும். இந்த பயிர் பருவக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஜயத் பயிர் பருவம் என்று அழைக்கப்படுகிறது. இப்பருவத்தில் நீண்டகாலம் பூக்கும் சூடான வரண்ட வானிலை தேவைப்படும் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக இந்தப் பட்டத்தில் பழங்கள், காய்கறிகள் போன்றவை பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன.மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்குனிப்_பட்டம்&oldid=3293191" இலிருந்து மீள்விக்கப்பட்டது