பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய்
2வது மத்தியப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
1 சனவரி 1957 – 30 சனவரி 1957
முன்னவர் இரவிசங்கர் சுக்லா
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு
பதவியில்
12 மார்ச் 1962 – 29 செப்டம்பர் 1963
முன்னவர் கைலாசு நாத் கட்சு
பின்வந்தவர் துவாரக பிரசாத் மிசுரா
சட்டமன்ற உறுப்பினர் மத்தியப்பிரதேசம்
பதவியில்
1957–1967
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 15, 1892(1892-12-15)
காண்டுவா, மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியா
இறப்பு 3 நவம்பர் 1977(1977-11-03) (அகவை 84)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கல்வி இளங்கலை, LLB
As of 1 June, 2017
Source: ["Profile - Bhagwantrao Mandloi". Madhya Pradesh Vidhan Sabha. http://mpvidhansabha.nic.in/cm-bmandaloi.htm. ]

பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய் (Bhagwantrao Mandloi)(15 திசம்பர் 1892 - 3 நவம்பர் 1977), என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் காண்டுவாவில் பிறந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர் ஆவார்.[1]

இவர் 1 சனவரி 1957 முதல் 30 சனவரி 1957 வரையிலும், 12 மார்ச் 1962 முதல் 29 செப்டம்பர் 1963 வரையிலும் இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் காண்டுவா[2] சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]