துவாரக பிரசாத் மிசுரா
பண்டிட் துவாரக பிரசாத் மிசுரா | |
---|---|
மத்தியப் பிரதேசத்தின் நான்காவது முதலமைச்சர் | |
பதவியில் 30 செப்டம்பர் 1963 – 29 சூலை 1967 | |
ஆளுநர் | ஹரி வினாயக் பட்டாசுகர் கிசாம்பள்ளி செங்கல்ராய ரெட்டி பி. வி. தீட்சித் (பொறுப்பு) |
முன்னவர் | பகவந்ராவ் மாண்ட்லோ |
பின்வந்தவர் | கோவிந்த் நாரயண்Govind Narayan Singh |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1901 ஊன்னாவ், North-West Provinces, பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 1988 (aged 86-87) |
தேசியம் | Indian |
பிள்ளைகள் | Awadesh Chandra Mishra, பிரிஜேஷ் மிஸ்ரா, Durga Mishra Hridayesh Chandra Mishra, Naresh Chandra Mishra |
பணி | Politician |
பண்டிட் துவாரக பிரசாத் மிசுரா (Pt. Dwarka Prasad Mishra) இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதியான இவர் (1901-1988) மத்திய பிரதேச முதல்வராக இருந்தார் . மேலும் இவர் ஒரு எழுத்தாளராரும் ஆவார்.[1]
இந்திய விடுதலை இயக்க வீரரான இவர் ஒரு இராஜதந்தியாகவும் இருந்தார். இவர் உன்னாவ் அருகிலுள்ள பதாரி கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு கவிஞராக 'கிருஷ்ணாயனம்' என்ற காவியத்தை எழுதினார் . சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் முதலமைச்சர் என். பி. கரேவின் கீழ் மத்திய மாகாணங்களில் அமைச்சரவையிலும் சேர்ந்தார் கரேயின் பரிந்துரையின் பேரில் 1938 ஜூன் மாதம் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இரவிசங்கர் சுக்லா , டி. எஸ். மேத்தா ஆகியோருடன் இவர் மூன்று அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். மத்தியப் பிரதேசத்தின் முதல் முதல்வர் இரவிசங்கர் சுக்லாவிற்குப் பிறகு இவர் முதல்வரானார்னார். [2]
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பிரஜேஷ் மிஸ்ரா இவரது மகனாவார். பாலிவுட் திரைப்பட இயக்குனர் சுதிர் மிஸ்ரா இவரது பேரன். ஜபல்பூர், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளாது.
பத்திரிகை[தொகு]
மிசுரா , ஓர் பத்திரிகையாளராக லோக்மத், ஷார்தா , சர்தி ஆகிய மூன்று இந்தி மொழி பத்திரிகைகளை வெளியிட்டு வந்தார். இவரது காவிய 'கிருஷ்ணாயணம்' விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
விடுதலை இயக்கம்[தொகு]
இவர் இந்திய விடுதலை இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார். மேலும் 1920 ஆம் ஆண்டில் தனது 19 வயதில் முதன்முறையாக சிறைக்குச் சென்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Dwarka prasad Mishra | कलम के पुजारी : पं. द्वारका प्रसाद मिश्र". Hindi.webdunia.com. 2012-07-11 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://unnao.nic.in/Personali.htm
வெளி இணைப்புகள்[தொகு]
- DKPA : Stamp Calendar - Stamps Issued by India in August 2001 at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 27 அக்டோபர் 2009)