பகலமுகி கோயில், பாங்கந்தி, இ.பி
பகலமுகி கோயில், பாங்கந்தி | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இமாச்சலப் பிரதேசம் |
அமைவு: | Bankhandi |
ஆள்கூறுகள்: | 31°58′05″N 76°12′25″E / 31.968°N 76.207°E |
கோயில் தகவல்கள் | |
இணையதளம்: | https://mabaglamukhi.org |
பாங்கந்தி எனும் பகலமுகி கோயில் (Bagalamukhi Temple, bankhandi) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்து சமயத்தின் தேவியின் பத்து மகாவித்யாக்களில் ஒருவரான பகளாமுகி தேவிக்கு கட்டப்பட்டுள்ளது. இவர் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். [1] இவருக்கு பீதாம்பரமா என்றும் பெயரும் உண்டு. இந்த தேவி பலவிதமான நகைகளால் அலங்கரிக்கப்பட்ட தூண்களுடன் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இவர் மூன்று கண்கள் கொண்டவர். அது பக்தனின் தவறான சிந்தனைகளை, மாயைகளைப் போக்கி அறிவை வழங்குபவர் என்பதைக் குறிக்கிறது.
நவராத்திரி பண்டிகைக்கு இக்கோயில் பிரசித்தி பெற்றது. வரலாற்று ரீதியாக இந்தியாவில் பகலமுகிக்கு உள்ள மூன்று கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றவை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ததியாவும் நல்கேடாவும் ஆகும். இது 1815 மறு நிர்மானம் செய்யப்பட்டது.
அமைப்பு
[தொகு]இக்கோவிலின் கருவறையில் பார்வதியின் அம்சமான பகலமுகி லட்சுமி மற்றும் சரசுவதிக்கு இடையில் அமைந்துள்ளார். கோயிலில் கிருஷ்ணர், அனுமன், பைரவர் சிலைகளும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kinsley, David R. (1998). Tantric Visions of the Divine Feminine: The Ten Mahāvidyās (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1522-3.