பகடி ஓவியம்
Appearance
பகடி ஓவியம் (caricature), ஒரு மனிதனை அல்லது ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை நகைச்சுவைக்காக அல்லது அரசியலுக்காக பகடி செய்து மிக எளிமையாக வரைவதாகும். இது கருத்தோவியத்தை விட எளிமையாக, ஓவியத்தில் எவ்வித குறிப்பு எழுத்துக்கள் இன்றி வரைவதாகும்.[1]
பகடி ஓவியங்கள் அவமதிப்பதாகவோ அல்லது பாராட்டுக்குரியதாகவோ இருக்கலாம். மேலும் அரசியல் நோக்கத்திற்காக அல்லது பொழுதுபோக்கிற்காக மட்டுமே வரையலாம். அரசியல்வாதிகளின் கேலிச்சித்திரங்கள் பொதுவாக தலையங்க கருத்தோவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் திரைப்பட நட்சத்திரங்களின் கேலிச்சித்திரங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு இதழ்களில் காணப்படுகிறது..
இலக்கியப்படி, பகடி ஓவியம் என்பது ஒரு நபரின் விளக்கமாகும். இது சில குணாதிசயங்களை மிகைப்படுத்திப் பயன்படுத்துகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Celebrity Caricature
- Caricature பரணிடப்பட்டது 2007-11-23 at the வந்தவழி இயந்திரம்