நோய் உருவாக்கம்
நோய் உருவாக்கம் (Pathogenesis) என்பது நோயியலில் ஒரு நோய்க்கு காரணமான நோய்க்கிருமி உயிரியல் வழிமுறை மூலம் பரவுவதை குறிக்கும். மேலும் இந்த வார்த்தை நோயின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கக்கூடியது. இந்நோய் கடுமையானதாகவோ, நீண்டகாலமாகவோ அல்லது மீண்டும் மீண்டும் வருகிறதா என்பதையும் விவரிக்க முடியும்.[1] இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான பாத்தோஸ் (‘நோய்’) மற்றும் ஜெனிசிஸ் (‘உருவாக்கம்’) என்ற வார்த்தையிலிருந்து உருவானது.
விளக்கம்
[தொகு]நுண்ணுயிர் நோய்த்தொற்று, வீக்கம், புற்று நோய் மற்றும்திசு முறிவு ஆகியவை நோய் உருவாக்க வகைகள் ஆகும். உதாரணமாக பாக்டீரியா நோய் உருவாக்கத்தில் எந்த பாக்டீரியா நோய்த்தொற்றை தோற்றுவித்து உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என்பதை குறிக்கும் வழிமுறையாகும்.
பெரும்பாலான நோய்கள் பல்வேறு செயல்முறைகளால் ஏற்படுகின்றன. உதாரணமாக, சில புற்றுநோய்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பினால் ஏற்படுகின்றன (நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்கத்தால் விளையும் தோல் புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் லிம்போமாக்கள்). [2][3]
சில அடிப்படைக் காரணங்களால் உருவாகும் ஒரு நோயைக் (அல்லது நிலை) கட்டுப்படுத்துவதன் மூலம் நோயைத்[4] தடுக்கலாம். பெரும்பாலும் நோய்ப்பரவலியல் உற்றுநோக்கலில் நோய்க்குறியியல் இணைப்பானது நோய்க்கும் அதற்கான காரணத்திற்கும் இடையேயான முக்கிய காரணியானது. ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டது. மூலக்கூறு நோய்ப்பரவலியலில் நேரடியாக தொற்றுநோயியல் அணுகுமுறை [5] ஒருங்கிணைக்கப்படலாம். மூலக்கூறு நோய்ப்பரவலியல் தொற்று நோய் உருவாக்கத்துடன் சாத்தியமான ஆபத்து காரணியை இணைப்பதன் மூலம் நோய்க்கிருமி மற்றும் காரணியை மதிப்பிடுவதற்கு உதவுகிறது. இவ்வாறு, மூலக்கூறு நோய்ப்பரவலியல் சாதாரண காரணங்களை முந்தியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gellman, Marc D.; Turner, J. Rick, eds. (2013). Encyclopedia of Behavioral Medicine. New York: Springer. p. 716. ISBN 978-1-4419-1380-7.
- ↑ Fox A (2010). General aspects of bacterial pathogenesis. University of South Carolina School of Medicine: Microbiology and Immunology On-line Textbook.
- ↑ Porta M, Greenland S, Hernán M, dos Santos Silva I, Last JM, eds. (2014). ['http://global.oup.com/academic/product/a-dictionary-of-epidemiology-9780199976737?cc=us&lang=en A dictionary of epidemiology] (6th ed.). Oxford: Oxford University Press. ISBN 9780199976737.
{{cite book}}
: Check|url=
value (help) - ↑ Last, JM, ed. (2000). A Dictionary of Epidemiology (4th ed.). Oxford: Oxford University Press. p. 132. ISBN 978-0-19-977434-0.
- ↑ "Lifestyle factors and microsatellite instability in colorectal cancer: the evolving field of molecular pathological epidemiology". J. Natl. Cancer Inst. 102 (6): 365–7. 2010. doi:10.1093/jnci/djq031. பப்மெட்:20208016.
இதனையும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Haugan S, Bjornson W (2009). Avian influenza: etiology, pathogenesis, and interventions. Hauppauge, NY: Nova Science Publishers. ISBN 978-1-60741-846-7.