நொப்பிக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Knoppix

Knoppix 5.3.1
நிறுவனம்/
விருத்தியாளர்
குளோஸ் நொப்பர் (Klaus Knopper)
இயங்குதளக் குடும்பம் லினக்ஸ்
மூலநிரல் வடிவம் திறந்தநிரல்
பிந்தைய நிலையான பதிப்பு 5.1.1 / 4 ஜனவரி, 2007
கிடைக்கும் மொழிகள் ஜேர்மன் மற்றும் ஆங்கிலம்
(பிரெஞ் Kaella உடன்)
கேர்னர்ல் வகை Monolithic kernel, Linux
அனுமதி Various, mostly GPL[1]
தற்போதைய நிலை விருத்தியில் உள்ளது.
இணையத்தளம் www.knoppix.org

நொப்பிக்ஸ் அல்லது நாப்பிக்ஸ் என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் ஆலோசகரான கார்லஸ் நோப்பரினால் உருவாக்கப்பட்டது.

ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான வரைகலைச் சூழல் கிடைக்கின்றது.

கநோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது CD/DVD இலேயே ஆரம்பிப்பது வழக்கம் எனினும் இது கணினியில் நிறுவியும் பாவிக்கக்கூடியது. யுஎஸ்பியூடாக (USB) கணினிகளை ஆரம்பிக்ககூடிய இடங்களில் கணினியானது யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க் மற்றும் மெமரிகாட்கள் ஊடாகவும் ஆரம்பிக்கக்கூடியது.

இருவேறு பதிப்புக்களில் கெனோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது கிடைக்கின்றது. 700MB அளவுள்ள இறுவட்டுப் பதிப்பு மற்றது 4.7 GB அளவுள்ள டிவிடி (DVD) மக்ஸி (Maxi) பதிப்பு. இந்த இரண்டு பதிப்புக்களும் ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.

இதை ஆரம்பிக்கும்போது இதன் உள்ளடக்கமானது ராமிற்கு (நினைவகத்திற்கு) இடமாற்றப்படுகின்றது. நோப்பிக்ஸ் பெரும்பாலும் இலவச மென்பொருட்களைக் கொண்டுள்ளபோதிலும் அவ்வாறல்லாத சில மென்பொருட்களையும் கொண்டுள்ளது.கணினி பிணையங்கள் சம்பத்தப்பட்ட பல ஆய்வுகள் செய்ய இந்த லினக்ஸ் பயன்படுத்துகின்றனர்

பயன்பாடு[தொகு]

நோப்பிக்ஸ் லினக்ஸில் பல பயன்பாடுகள் உண்டு

  • லினக்ஸை விளங்கப்படுத்தும் ஓர் மேசைமேற் கணினி இயங்குதளமாக.
  • வர்தகநிலையங்களில் கணினியானது லினக்ஸுடன் ஒத்திசைவாக இயங்குமான எனப்பார்வையிட்டுக் கணினியை வாங்குவதற்குப் பயன்படுகின்றது.
  • பாதுகாப்பாக இணையத்தை உலாவும் சூழலை அளிக்கின்றது. இதில் வைரஸ் தாக்குதல்கள் குறைவாகவும், அந்தரங்கத்தன்மை பாதுக்காப்பதுடன் தரவு இழப்புக்களும் குறைவாகவுள்ளது.
  • பழுதடைந்த இயங்குதளத்தில் இருந்து கோப்புக்களை மீட்டெடுத்து பின்னர் மீண்டும் இயங்குதளத்தை நிறுவ உதவுதல்.
  • வன்வட்டினைப் சீராகவுள்ளாதா எனப்பரிசோதித்தல்.

உள்ளடக்கம்[தொகு]

1000 இற்கு மேறபட்ட மென்பொருட்கள் CD பதிப்பிலும் 2600 இற்கு மேற்பட்ட மென்பொருட்கள் DVD பதிப்பிலும் உள்ளன. 9ஜிபி அளவானது ஓர் DVD இல் சுருக்கிச் சேமிக்கலாம். இதிலுள்ள முக்கியமான மென்பொருட்கள்

  • கேடியீ வரைகலை இடைமுகமே இதன் பொதுவான டெக்ஸ்டாப் சூழலாகும். இது கொன்குவர் உலாவியையும் கெமெயில் மின்னஞ்சல் மென்பொருளையும் கொண்டுள்ளது.
  • இணைய இணைப்பு மென்பொருட்கள்: கேபிபிபி டயலர், ஐஎஸ்டிஎன் (ISDN) பிரயோகங்கள் மற்றும் கம்பியற்ற வலையமைப்பு மென்பொருட்கள்.
  • மொஸிலா பயர்பாக்ஸ் உலாவி.
  • கிம்ப் (GIMP) படங்களை மெருகூட்டும் மென்பொருள்.
  • கோப்புக்களை மீட்டெடுக்கவும், சிஸ்டங்களைச் சரிசெய்யவும் உதவும் கருவிகள்.
  • வலையமைப்பை ஆராயவும் மற்றும் நிர்வாகக் கருவிகள்.
  • ஓப்பிண் ஆபிஸ் அலுவலகத் தேவைகளுக்கான மென்பொருள்.
  • பல்வேறு நிரலாக்க மற்றும் விருத்திசெய்யும் கருவிகள்.

தேவைகள்[தொகு]

  • CD/DVD ROM Drive
  • கேடீயி வரைகலைச் சூழலை ஆரம்பிக்க ஆகக்குறைந்தது 96MB RAM.

பிரபலம்[தொகு]

நோப்பிக்ஸ் மிகவும் பிரபலமான CD இல் இருந்து இயங்கும் லினக்ஸாக விளங்குகின்றது. இதற்கான காரணங்களாவன

  • கநோப்பிக்ஸே முதலில் வந்த லைவ் CD க்ளுள் ஒன்றாகும்.
  • மிகக்கூடுதலான வன்பொருட்களின் ஆதரவானது எதுவித பிரச்சினையுமின்றி லினக்ஸை ஆரம்பிக்க உதவுகின்றது.
  • வலையமைப்புக்களில் தானகவே இணைந்துகொள்ளும் வசதி
  • சிஸ்டங்களை பழுதுபார்க்கவும் சரிப்படுத்துவதற்குமான மென்பொருட்கள்.

சில குறைகள்[தொகு]

சிலகுறைகளும் இதில் காணப்படுகின்றது.

  • கநோப்பிக்ஸ் பெருமளவிலான மேசைக்கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் இயங்குமெனினும் எல்லாவற்றிலும் அல்ல. தானகவே வன்பொருட்களைக் கண்டறிதல் மிகச் சரியானது எனக் கூறமுடியாது. சிலசமயங்களில் அது சரியாகக் கண்டறிவதில்லை. 1998 ஆம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கபட்ட வன்பொருட்களை கநோப்பிக்ஸ் கண்டறிவது சிரமமாகவுள்ளது. 2002 இற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கணினி பயோஸ் போன்றவற்றிலும் இதே பிரச்சினைகள் உண்டு.

பதிப்புக்கள்[தொகு]

4ஆம் பதிப்பிலிருந்து இரண்டு CD மற்றும் DVD பதிப்புக்களாக இவை வெளிவந்தன. DVD பதிப்பானது 9 ஜிகாபைட்டிற்கும் மேலான மென்பொருட்களைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் ஜேர்மனினியில் CEbit இல் இது வெளியிடப்பட்டது இமக்களிற்குப் பொதுவாகக் கிடைக்கின்றது. இதன் சாதாரண இறுவட்டுப் பதிப்பும் (CD) 5.1.1 உடன் இடைநிறுத்தபப்ட்டுள்ளது. தற்போதைய பதிப்புக்கள் டீவிடி இலேயே கிடைக்கின்றது. [1] பரணிடப்பட்டது 2008-05-02 at the வந்தவழி இயந்திரம்.

நொப்பிக்ஸ் பதிப்பு வெளியீட்டுத் திகதி இறுவட்டு (CD) டீவிடி
1.4 30 செப்டம்பர் 2000 ஆம் இல்லை
1.6 26 ஏப்ரல் 2001 ஆம் இல்லை
2.1 14 மார்ச் 2002 ஆம் இல்லை
2.2 14 மே 2002 ஆம் இல்லை
3.1 ஜனவரி 19 2003 ஆம் இல்லை
3.2 ஜூலை 26 2003 ஆம் இல்லை
3.3 பெப்ரவரி 16 2004 ஆம் இல்லை
3.4 மே 17 2004 ஆம் இல்லை
3.5 LinuxTag-பதிப்பு ஜூன் 2004 இல்லை ஆம்
3.6 16 ஆகஸ்ட் 2004 ஆம் இல்லை
3.7 டிசெம்பர் 9 2004 ஆம் இல்லை
3.8 CeBIT-பதிப்பு 28 பெப்ரவரி 2005 ஆம் இல்லை
3.8.1 8 ஏப்ரல் 2005 ஆம் இல்லை
3.8.2 மே 12 2005 ஆம் இல்லை
3.9 ஜூன் 1 2005 ஆம் இல்லை
4.0 ஜூன் 22 2005 இல்லை ஆம்
4.0 updated ஆகஸ்ட் 16 2005 இல்லை ஆம்
4.0.2 செப்டம்பர் 23 2005 ஆம் ஆம்
5.0 பெப்ரவரி 25 2006 இல்லை ஆம்
5.0.1 ஜூன் 2 2006 ஆம் ஆம்
5.1.0 30 டிசெம்பர் 2006 ஆம் ஆம்
5.1.1 4 ஜனவரி 2007 ஆம் ஆம்
5.2 CeBIT-பதிப்பு மார்ச் 2007 இல்லை ஆம்
5.3 CeBIT-பதிப்பு 12 பெப்ரவரி 2008 இல்லை ஆம்
5.3.1 26 மார்ச் 2008 இல்லை ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "KNOPPIX Linux Live CD: What license does the KNOPPIX-CD use?". பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொப்பிக்சு&oldid=3654207" இலிருந்து மீள்விக்கப்பட்டது