உள்ளடக்கத்துக்குச் செல்

நைட்ரமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட்ரமீன்
Nitramine
பெயர்கள்
வேறு பெயர்கள்
நைட்ரமைடு
இனங்காட்டிகள்
7782-94-7 Y
ChEBI CHEBI:29273 Y
ChemSpider 22941 Y
InChI
  • InChI=1S/H2N2O2/c1-2(3)4/h1H2 Y
    Key: SFDJOSRHYKHMOK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/H2N2O2/c1-2(3)4/h1H2
    Key: SFDJOSRHYKHMOK-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24534
  • N[N+](=O)[O-]
பண்புகள்
H2N2O2
வாய்ப்பாட்டு எடை 62.03 கி.மோல்−1
தோற்றம் நிறமற்ற திண்மம்[1]
உருகுநிலை 72 முதல் 75 °C (162 முதல் 167 °F; 345 முதல் 348 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நைட்ரமைடு (Nitramide) என்பது H2NNO2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரமைடுகளின் கரிம வேதியியல் வழிபொருட்கள் நைட்ரோ அமீன்கள் எனப்படுகின்றன. இவை பரவலாக வெடிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஆங்கிலத்தில் ஆர்.டி.எக்சு எனப்படும் ஆய்வுத் துறை வெடிபொருள் மற்றும் எச்.எம்.எக்சு எனப்படும் ஆக்டோசன் உள்ளிட்ட வெடிபொருள்கள்.

கட்டமைப்பு

[தொகு]

வாயு நிலையில் நைட்ரமைடு மூலக்கூறானது தளமில்லா அமைப்பை கொண்டிருக்கிறத[2]ஆனால் படிகநிலையில் தள அமைப்பைப் பெற்றுள்ளது.[1]

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் நைட்ரோகார்பமைடை நீராற்பகுப்பு செய்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை தையீல் மற்றும் லாக்மான் அசல் தொகுப்பு முறை எனப்படுகிறது:[1]

K2(O2NNCO2) + 2H2SO4 → O2NNH2 + CO2 + 2KHSO4

நைட்ரோகார்பமிக் அமிலத்தை நீராற்பகுப்பு செய்யும் மாற்றுத் தயாரிப்பு வழிமுறைகளும் அறியப்பட்டுள்ளன.

O2NNHCO2H → O2NNH2 + CO2

சோடியம் சல்பமேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை:

Na(SO3NH2) + HNO3 → O2NNH2 + NaHSO4

இருநைட்ரசன் ஐந்தாக்சைடுடன் இரண்டு சமப்பங்கு அமோனியா சேர்த்து நைட்ரமைடு தயாரிக்கும் முறை போன்ரவை இதர முறைகளாகும்.

N2O5 + 2NH3 → O2NNH2 + NH4NO3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Häußler, A.; Klapötke, T. M.; Piotrowski, H. (2002). "Experimental and Theoretical Study on the Structure of Nitramide H2NNO2". Zeitschrift für Naturforschung 57 b (2): 151–156. http://www.znaturforsch.com/ab/v57b/s57b0151.pdf. 
  2. Tyler, J. K. (1963). "Microwave Spectrum of Nitramide". Journal of Molecular Spectroscopy 11 (1–6): 39–46. doi:10.1016/0022-2852(63)90004-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்ரமைடு&oldid=4105092" இலிருந்து மீள்விக்கப்பட்டது