நெல் ஆராய்ச்சி நிலையம், திரூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
TIRUR RICE RESEARCH STATION.jpg

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ரோடு அருகில் உள்ள திருவூரில் அமைந்துள்ள இந்த நெல் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சி நிலையங்களுள் ஒன்றாகும்; மற்றுமொரு நெல் ஆராய்ச்சி மையம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது [1].

வரலாறு[தொகு]

இது 1942-ஆம் ஆண்டு நெல் பரிசோதனை நிலையமாகத் தொடங்கப்பட்டது; 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, 1982-ஆம் ஆண்டு நெல் ஆராய்ச்சி நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது [2].

இருப்பிடம்[தொகு]

இந்நிலையம் சென்னை-அரக்கோணம் இரயில் பாதையில் அமைந்துள்ள செவ்வாப்பேட்டை ரோடு என்ற தொடர்வண்டி நிலையத்திற்கு தெற்கே 1.5 கிமீ தொலைவிலுள்ள திரூர் குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது; சென்னையிலிருந்து இதன் தொலைவு சுமார் 35 கிமீ ஆகும்.

முக்கியச் செயல்பாடுகள்[தொகு]

இந்நிலையத்தின் முக்கியச் செயல்பாடுகளுள் சில:

 • மேட்டு நிலம், மானாவாரி மற்றும் பாசன நிலங்களுக்கேற்ற அதிக மகசூல் தரும், தரமான நெல் இரகங்களை உருவாக்குதல்.
 • களர், உவர் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற இரகங்களை உருவாக்குதல்.
 • டி.கே.எம் 9, டி.கே.எம் 11 மற்றும் டி.கே.எம் (ஆர்) 12, ஏ.டி.ட்டி, 43, ஏ.டி.ட்டி (ஆர்) 45. ஆகிய ரகங்களுக்கு கரு மற்றும் வல்லுனர் விதைகளை உற்பத்தி செய்தல்.
 • குலை நோய், துங்ரோ நோய், இலைகீறல் நோய், இலைமடக்குப்புழு மற்றும் கரு வண்டு எதிர்ப்பு இரகங்களை உருவாக்குதல்.
 • திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்த்த விவசாயிகளுக்கும், விரிவாக்க அலுவலர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து நிவர்த்தி செய்தல்.[3]

ஆராய்ச்சி அருவினைகள்[தொகு]

இங்கு செய்யப்படும் ஆய்வுத் தலைப்புகளில் சில:

 • தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபணுவியல்
 • மண் அறிவியல்
 • பயிர் வினையியல்
 • வேளாண் பூச்சியியல்
 • பயிர் நோயியல்
 • வேளாண் பொறியியல்

மேற்கோள்கள்[தொகு]

 1. http://agritech.tnau.ac.in/ta/about_us/abt_us_research_ta.html
 2. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_tirur.html
 3. http://agritech.tnau.ac.in/ta/expert_system/paddy/institutes.html