உள்ளடக்கத்துக்குச் செல்

களர் நிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களர் நிலம் என்பது அமிலம் மற்றும் காரத்தன்மை உள்ள நிலமாகும். மண்ணிலுள்ள சோடியம் உப்புக்களின் அளவு அதிகமாகும் போது களர்நிலம் உருவாகிறது. களர் நிலங்களில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும், அவற்றின் செயல் திறனும் குறைந்து காணப்படும்.

களர் நிலத்தைப் பற்றிய குறிப்புகள் தமிழ்ச் செய்யுட்களில் காணலாம்:

" கல்வியில் லாத பெண்கள்
          களர் நிலம்: அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்; நல்ல
     புதல்வர்கள் விளைதல் இல்லை!"[1]
 

"உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
       களர் அனையர் கல்லாதவர்.[2]"

மேற்கோள்

[தொகு]
  1. பாரதிதாசன் குடும்பவிளக்கு
  2. திருக்குறள், 406

விளைவுக்கு முற்றிலும் பயனற்ற நிலம். விதையை முளைக்கவிடரமல் தடுக்கும் தன்மை உடையது. இதனை சவட்டு நிலம் என்றும் கூறுவர். இதில் முள்ளுடைய மரங்கள் வளரும்.களர் நிலங்களில் களிமண்ணின் மீது சோடிய அயனிகள்அதிகமாக படிந்து விடுகின்றன இந்த மண்ணில் கார அமில நிலை 8.5 க்கு மேல் இருக்கும். சோடியம் அயனிகள் படிமானமும் 15% மேல் இருக்கும் களர் மண்ணால் ஏற்படும் தீமைகள் 1. மண் இறுகியும், காற்றோட்ட வசதி இல்லாமல் இருப்பதால், வேரின் வளர்ச்சி தடைபடும் 2. நூண்ணூட்டச் சத்துகளின் பற்றாக்குறை ஏற்படும் 3. நுண்ணுயிர்கள் பெருக்கமும், செயல்பாடும் தடைபடும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=களர்_நிலம்&oldid=2745548" இலிருந்து மீள்விக்கப்பட்டது