உள்ளடக்கத்துக்குச் செல்

நெய்தலங்கானல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெய்தலங்கானல் என்பது புகார் நகரப்பகுதி. சோழ அரசன் இளஞ்சேட் சென்னி ‘நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி’ என்று அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான்.

திருச்சி மாவட்டம் குளித்தலைப் பகுதியில் நெய்தலூர் என்னும் பெயர் கொண்ட ஊர் உள்ளது.
இந்த நெய்தலூரே சங்ககாலத்து நெய்தலூர் எனக் கொள்வதற்குத் தடையாக உள்ள சொல் 'கானல்'. கானல் என்பது கடற்கரையைக் குறிக்கும். எனவே நெய்தலங்கானல் என்பது புகார் நகரப்பகுதி எனக் கொள்வது பொருத்தமானது.

இந்த ஊரை (குளித்தலையை)த் தலைநகராகக் கொண்டுதான் இளஞ்சேட்சென்னி ஆட்சிபுரிந்துவந்தான் எனக் கொள்வது ஒருபுறம் இருக்கப் புகார் நிலப் பகுதியான நெய்தலங்கானல் பகுதி அரசனே இந்த இளஞ்சேட்சென்னி எனக் கொள்வது பொருத்தமானது.

போர்வை என்னும் ஊரை (பேட்டைவாய்த்தலையை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி என்பதனை நினைவில் கொண்டுதான் குளித்தலை நெய்தலூர் இங்கு எண்ணிப் பார்க்கப்பட்டது.

நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தலங்கானல்&oldid=893381" இலிருந்து மீள்விக்கப்பட்டது