நெடியவன்
நெடியவன் | |
---|---|
நெடியவன் | |
தாய்மொழியில் பெயர் | நெடியவன் |
பிறப்பு | பே. சிவபரன் 28 ஆகத்து 1976 வட்டுக்கோட்டை, இலங்கை |
மற்ற பெயர்கள் | நெடி |
செயற்பாட்டுக் காலம் | 1994– |
அமைப்பு(கள்) | தமிழீழ விடுதலைப் புலிகள் |
நெடியவன் (Nediyavan) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் பேரின்பநாயகம் சிவபரன் (28 ஆகத்து 1976) என்பவர் ஒரு இலங்கைத் தமிழ்ப் போராளி ஆவார். இவர் இலங்கைத் தமிழ் போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி உறுப்பினராவார்.
துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்
[தொகு]சிவபரன் 1976. ஆகத்து 28 அன்று வடக்கு இலங்கையின் வட்டுக்கோட்டையில் பிறந்தார்.[1] இவரது குடும்பம் வட்டுகோடை அருகே உள்ள சங்கரத்தாயைச் சேர்ந்தது. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.[2]
சிவபரன், கேப்டன் லாலா ரஞ்சனின் மருமகள் சிவகௌரி சாந்தாமோகனை (கௌரி) 30 அக்டோபர் 2005 அன்று மணந்தார்.[2][3]
பணி
[தொகு]சிவபரன் 1994 ஆண்டு தனது 18வது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.[2][3] 6 அடி உயரம் கொண்ட சிவபரனுக்கு "நெடியவன்" (உயரமானவன்) என்ற இயக்கப் பெயர் வழங்கப்பட்டது.[2][3] ஆரம்பக் கட்டப் பயிற்சிக்குப் பிறகு நெடியவன் கிட்டுவின் 'காவலர் கல்லூரி'யில் பயின்றார்.[2] இவரைப் புலிகள் அமைப்பு அரசறிவியல் படிப்பதற்காக உருசியாவுக்கு அனுப்பி வைத்தது, ஆனால் படிப்பை முடிக்கவில்லை.[2][3]
பின்னர் நெடியவன் சு. ப. தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் அரசியல் பிரிவில் இணைந்து இலங்கை அரசாங்கத்துடன் பல்வேறு நோர்வே மத்தியஸ்த சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்றார்.[2][3][4] நெடியவன் பின்னர் காஸ்ட்ரோ (வீரகுலசிங்கம் மணிவண்ணன்) தலைமையிலான புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்பு மையத்தில் (ஐசிசி) பணியாற்றினார்.[2][3] வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் முன்னணி அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.[2]
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 2006 இல் நோர்வே நாட்டுக்கு நெடியவன் அனுப்பப்பட்டார்.[3][5] 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் மீண்டும் யுத்தம் ஆரம்பமான போது காஸ்ட்ரோ நெடியவனைப் புலிகளின் சர்வதேசப் பிரிவுகளின் பொறுப்பாளராக நியமித்தார்.[3][5] 2009 ஆண்டின் முற்பகுதியில், போர் தீவிரமடைந்த நிலையில், நெடியவனின் முன்னோடியான செல்வராசா பத்மநாதன் புலிகளின் சர்வதேசப் பிரிவின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றார். இந்த நிகழ்வு காஸ்ட்ரோவுக்கு வெறுப்பை உண்டாக்கியது.[3][5] 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு அதன் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த புலிகளின் தலைமைப் பொறுப்பை பத்மநாதன் ஏற்றுக்கொண்டார்.[3][5] பத்மநாதனின் தலைமையை காஸ்ட்ரோ, நெடியவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் எதிர்த்தனர்.[3][5] 2009 ஆகத்தில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெடியவன் விடுதலைப் புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது, இருப்பினும் இவரது மனைவி கௌரி இதை மறுத்தார்.[6][7][8] நெடியவன் செய்த துரோகத்தின் விளைவே பத்மநாதனின் கைது என்று முன்னாள் இலங்கை தூதர் கே. கொடகே குற்றஞ்சாட்டியுள்ளார்.[9]
நெடியவன் நோர்வேவில் ஒரு மழலையர் பள்ளியில் பணியாற்றினார்.[6] நோர்வேவில் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) தலைவராக இருந்தார்.[7] குறிப்பிடப்படாத காரணங்களுக்காக இவர் 2009 ஆகத்தில் நோர்வே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.[7]
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தது தொடர்பாக நெடியவன் 2011 மே 18 அன்று நோர்வே காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.[6][10][11] ஒரு டச்சு நீதிபதி மற்றும் ஐந்து அரசு வழக்கறிஞர்களால் இரண்டு நாட்கள் விசாரிக்கப்பட்ட பின்னர் இவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் .[12][13] நோர்வேவில் வாழும் போது வன்முறையில் ஈடுபடவோ அல்லது வன்முறையை ஊக்குவிக்கவோ கூடாது என நெடியவனை காவல் துறையினர் எச்சரித்தனர்.[3] நெடியவன் ஒசுலோவை விட்டு 240 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்றார்.[3]
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 424 பேர்களில் நெடியவனும் ஒருவர்.[14] 2014 ஏப்ரலில் நெடியவன் உட்பட 40 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இலங்கை காவல்துறை சர்வதேச கைது வாரண்டுகள் (இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு) பிறப்பித்தது.[12][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SIWAPARAN, PERINBANAYAGAM". பன்னாட்டுக் காவலகம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 .
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 .
- ↑ Ferdinando, Shamindra (8 March 2010). "LTTE fund raising in Germany led by cadre trained in Vanni He visited Lanka during CFA, accompanied LTTE 'peace' delegation to Thailand". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2010/03/08/news1.html.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 .
- ↑ 6.0 6.1 6.2 Sethurupan, N. (20 May 2011). "New LTTE Leader Nediyavan arrested in Norway and held in custody". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2011/05/new-ltte-leader-nediyavan-arrested-in.html.
- ↑ 7.0 7.1 7.2 Jayawardhana, Walter (16 August 2009). "New LTTE leader is questioned by Norwegian Police". The Nation (Sri Lanka). http://www.nation.lk/2009/08/16/news2.htm.
- ↑ "Nediyavan not be new LTTE leader : Nediyavan wife". CNN iReport. 16 August 2009. http://ireport.cnn.com/docs/DOC-314919.
- ↑ Godage, K. (11 August 2009). "KP yes, but it's the LTTE that is in the dock". தி ஐலண்டு (இலங்கை). http://pdfs.island.lk/2009/08/11/p8.pdf.
- ↑ "Nediyawan arrested in Oslo". The Daily Mirror (Sri Lanka). 20 May 2011. http://www.dailymirror.lk/11489/nediyawan-arrested-in-oslo.
- ↑ Bell, Stewart (6 June 2011). "Police discover Sun Sea's link to Norway". National Post. http://news.nationalpost.com/news/canada/police-discover-sun-seas-link-to-norway.
- ↑ 12.0 12.1 "Red notice on Nediyavan: Norway still evaluating the request". The Daily Mirror (Sri Lanka). 25 April 2014. http://www.dailymirror.lk/46290/tech.
- ↑ Kamalendran, Chris (19 June 2011). "Dutch officials question KP and 12 others". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/110619/News/nws_03.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE UNITED NATIONS ACT. No. 45 OF 1968 List of Designated persons, groups & entities under paragraph 4(2) of the United Nations Regulations No. 1 of 20". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Extraordinary 1854/41: 33. 21 March 2014. http://www.documents.gov.lk/files/egz/2014/3/1854-41_E.pdf.
- ↑ "Nediyawan'sRed Notice Goes Online". த சண்டே லீடர். 27 April 2014. http://www.thesundayleader.lk/2014/04/27/nediyawansred-notice-goes-online/.