உள்ளடக்கத்துக்குச் செல்

நூலாம்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூலாம்ப‌டை அல்லது சிலந்தி வலை என்பது சிலந்தி வயிற்றுப்பகுதியில் நுற்கும் உறுப்புலுள்ள பல நுண்ணிய துளைகள் வழியே வெளிப்படும் பொருள். இந்ப் பட்டிழைகள் திரவ நிலையில்தான் சிலந்தியின் உடலிலிருந்து வெளிவருகிறது. பின்பு காற்றில் வினை புரிந்து அவ்விழைகள் திட நிலையை அடைந்து விடுகின்றன. இது உணவை பிடிப்பதற்கும் தான் வசிப்பதற்கும் பயன்படுத்துகிறது. ஆனால் அனைத்து வகை சிலந்திகளும் தங்கள் வலைகளை இரையைப் பிடிக்க பயன்படுத்துவதில்லை. வலை பின்னாத சில வகை சிலந்திகள் கூட உள்ளன. சிலந்தியின் வலைகள் ஒரு விதப் புரத இழையால் ஆன சிலந்திப் பட்டு என்ற பொருளால் பின்னப்படுகின்றன. 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே சிலந்தி வலைகள் இருந்தன என்று கண்டுடிபிடிக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நூலாம்படை&oldid=2430255" இலிருந்து மீள்விக்கப்பட்டது