நூக்கலா நரோதம் ரெட்டி
நூக்கலா நரோதம் ரெட்டி Nookala Narotham Reddy | |
---|---|
நூ. நரோதம் ரெட்டிN. | |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 மார்ச்சு 1921 மனுகொண்டா, வாரங்கல் மாவட்டம் |
இறப்பு | 14 மார்ச்சு 1984 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சுலோச்சனா தேவி |
பிள்ளைகள் | 3 மகன்கள் |
நூக்கலா நரோதம் ரெட்டி, (Nookala Narotham Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுருக்கமாக நூ. நரோத்தம் ரெட்டி என்று அழைக்கப்படுகிறார். உசுமானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். [1]
சிறீ ரங்கா ரெட்டியின் மகனாக வாரங்கல் மாவட்டத்தில் உள்ள மனுகொண்டாவில் 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சுலோச்சனா தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். முதுகலை பட்டம் பெற்ற இவர், கோலகொண்டா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத்து பிரதேச காங்கிரசு கமிட்டி மற்றும் 1960 இல் ஆந்திர பிரதேச மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார்.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 1960 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி வரையிலும், மீண்டும் ஏப்ரல் 3, 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல் 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
சுமார் இரண்டு தசாப்தங்களாக உசுமானியா பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கூட்டமைப்பு உறுப்பினராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]
ஆந்திர பிரதேச லலித் கலா அகாடமியின் தலைவராகவும் தேசிய லலித் கலா அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ரெட்டி 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reddy, N. Narotham at Rajya Sabha website.
- ↑ Narotham Reddy, Nookala, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 280.