நீள்மூஞ்சி வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீள்மூஞ்சி வண்டு
Lixus angustatus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
பெருங்குடும்பம்:
Curculionoidea

Latreille, 1802
Families

Anthribidae — fungus weevils
இலை சுருட்டி — leaf rolling weevils
Belidae — primitive weevils
Brentidae — straight snout weevils
Caridae
Curculionidae — true weevils
Nemonychidae — pine flower weevils

நீள்மூஞ்சி வண்டு (தமிழகத்தில் கூன்வண்டு என்று அழைக்கப்படுகிறது) என்பது நீளமான முகத்தைக் கொண்ட கேர்குயிலியொனொய்டியே சிறப்புக் குடும்பத்தைச் சேர்ந்த வண்டினம் ஆகும். இதில் ஏறக்குறைய 60,000 வகைகள் காணப்படுகின்றன.

இவை வண்டினத்தின் உடல் கீழ்ப்புறமாக வளைந்திருக்கும். நீளமான முன்னுறுப்பு மூலம் தன் சுற்றுப்புறத்தை உணரக்கூடியன. சில கூன்வண்டு வகைகள் பறக்கும் திறன் பெற்றவை. இந்தியாவில் இவை மிகவும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவுவரை காணப்படும் ஒரு தாவர உண்ணி ஆகும். இவை புல்தரை, வயல்வெளி, புதர்கள் போன்றவற்றில் காணப்படும். மாம்பழம், அரிசியின் உள்ளே இருந்தெல்லாம் புறப்பட்டு வருபவை இந்த கூன்வண்டுகள்தான். பொதுவாக இந்த வண்டினம் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறன்றன. நெல், கோதுமை, சோளம், பருத்தி போன்ற பயிர்களை இவை தாக்கக் கூடும். அதேநேரம் சில கூன்வண்டுகள் அயல் தாவரங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (31 மார்ச் 2018). "ஒல்லித் தலை கூன்வண்டு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீள்மூஞ்சி_வண்டு&oldid=3577654" இலிருந்து மீள்விக்கப்பட்டது