நீதா அசோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதா அசோக்
பிறப்புநீதா அசோக் கெர்லே
01 பிப்ரவரி 1991[1]
கோட்டா, உடுப்பி மாவட்டம், கருநாடகம், இந்தியா[2]
கல்விமுதுநிலை வணிக நிர்வாகம் (நிதி)[2]
பணி
  • திரைப்பட நடிகை
  • சின்னத்திரை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014-முதல்
பெற்றோர்அசோக் கெர்லே (தந்தை), கீதா (தாய்)[2]

நீதா அசோக் (Neetha Ashok) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடப் படங்களில் முதன்மையாக நடித்து வருகின்றார்.[3] இவர் 2019ஆம் ஆண்டு வெளியான ஜபர்தஸ்த் சங்கரா என்ற துளு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடத்தில் விக்ராந்த் ரோனா (2022) மூலம் நீதா அங்கீகாரம் பெற்றார்.[4]

இளமை[தொகு]

கருநாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த கடலோரப் பகுதி கிராமமான கோட்டா கிராமத்தில்[2] கோட்டா பிராமணக் குடும்பத்தில் பிறந்த நீதா, தில்லி, மங்களூரு மற்றும் பெங்களூருவில் வசித்துள்ளார்.[5][6] இவரது தந்தை அசோக் கெர்லே, ஒரு வங்கியாளர்; இவரது தாய் கீதா அசோக் கெர்லே. இவர் தன்னை சிவராம் கராந்தின் கொள்ளுப் பேத்தி என்று அழைக்கிறார்.[5]

தொழில் வாழ்க்கை[தொகு]

யசோதே, நா நின்னா பிடாலாரே, நீலம்பரி உள்ளிட்ட மூன்று கன்னடத் தொலைக்காட்சி தொடர்களிலும், தூர்தர்ஷனில் ஓர் இந்தி தொடர்களிலும் நீதா அசோக் நடித்தார்.[5] தேவதாசு கபிகாட் இயக்கி இவரது பள்ளி மூத்த தோழர் நடிகர் அர்ஜுன் கபிகாட் நடித்த ஜபர்டசுத் சங்கரா என்ற துளு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[6][7] கன்னட விருந்து ஒன்றில் நடிகர் சுதீப் சந்தித்த பிறகு விக்ராந்த் ரோனா (2022) மூலம் கன்னடத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[7]

திரைப்படவியல்[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி  
2019 ஜபர்டஸ்த் சங்கரா லாவண்யா துளு [6]
2022 விக்ராந்த் ரோனா அபர்ணா பல்லால் "பன்னா" கன்னடம் [8][9]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி  மேற்கோள்கள்
2014 யசோதே யசோதா கன்னடம் [10]
2016 நா நின்னா பிடாலாரே நந்தினி கன்னடம் [5]
ஆஷியன் இந்தி [5]
2018 நீலம்பரி கன்னடம் [11]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது வகை திரைப்படம் விளைவு  
2023 11வது தென்னிந்திய பன்னாட்டு திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக பெண்-கன்னடம் விக்ராந்த் ரோனா வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy birthady to Neetha Ashok of #VikrantRona fame". Bangalore Times Twitter. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  2. 2.0 2.1 2.2 2.3 "ವಿಕ್ರಾಂತ್ ರೋಣ ಸಿನಿಮಾಗೆ ನೀತಾ ಅಶೋಕ್ ಸೆಲೆಕ್ಟ್ ಆಗಿದ್ದು ಹೇಗೆ?". YouTube. 27 February 2021. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  3. "Serial actors perform at Chitradurga". The Times of India. 14 October 2018. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  4. A. Sharadhaa (21 July 2022). "Debuting with Vikrant Rona is like getting golden gift: Neetha Ashok". The New Indian Express. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4
  6. 6.0 6.1 6.2 KM Sathish Bellanki (8 November 2019). "ನೀತಾ ನಟನಾ ವೈಖರಿ". Prajavani (in கன்னடம்). Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  7. 7.0 7.1 A. Sharadhaa (13 February 2021). "Neetha Ashok: I am just lucky". The New Indian Express. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  8. "Actress Neetha Ashok's look from Phantom revealed". The Times of India. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  9. "Chittara Star Awards". awards.chittaranews.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதா_அசோக்&oldid=3918121" இலிருந்து மீள்விக்கப்பட்டது