நீண்டவால் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீண்டவால் பக்கி
JerdonsNightjar DSC 0351.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பக்கிகள்
குடும்பம்: Caprimulgidae
பேரினம்: Caprimulgus
இனம்: C. atripennis
இருசொற் பெயரீடு
Caprimulgus atripennis
Jerdon, 1845
CaprimulgusAtripennisMap.svg

நீண்டவால் பக்கி(Jerdon's Nightjar) பக்கிகள் இனத்தை சார்ந்த ஒரு நடுத்தரமான அளவுடைய பறவையாகும்.இது தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

தமிழில் :நீண்டவால் பக்கி

ஆங்கிலப்பெயர் :Jerdon's Nightjar

அறிவியல் பெயர் :Caprimulgus atripennis

உடலமைப்பு[தொகு]

28செ.மீ. - மஞ்சள் பழுப்பான உடலில் பல நிறக்கறைகளும் கோடுகளும் கொண்டது. [2]

காணப்படும் பகுதிகள்[தொகு]

பசுமை மாறாக் காடுகளையும், புதர்க் காடுகளையும் சார்ந்து மலைகளில் 2000மீ உயரம் வரையிலும் ஆங்காங்கே காணலாம். பழுத்து உதிர்ந்து கிடக்கும் இலைகளிடையே எளிதில் பார்வைக்குப் புலப் படாத படியான சுற்றுச் சூழலோடு இயைந்ததாகப் பகலெல்லாம் படுத்திருக்கும். ஒரே இடத்தில் கூட்டமாகப் பத்துப் பன்னிரண்டு பறவைகள் கூடக் குழுவாக இருக்கக் காணலாம். மரக்கிளைகளில் குறுக்காகவும் நெடுக்காகவும் படுத்தபடி சயுங், சயுங் என உரக்கச் சம்மட்டியால் அடிக்கும்போது எழும் ஒலி போல குரல் கொடுக்கும்,

நீண்டவால் பக்கி

உணவு[தொகு]

புழு பூச்சிகள், இரவில் பறக்கும் இறக்கையுள்ள பூச்சிகள் ஆகியவற்றைப் பிடித்துத் தின்னும். [3]

இனப்பெருக்கம்[தொகு]

மார்ச் முதல் ஜூலை வரை சிறு செடிகள் முளைத்துள்ள சிற்றோடைக் கரையில் தரையில் காய்ந்த இலைதழைகளைக் குவித்து 2 முட்டைகள் இடும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Caprimulgus atripennis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "Jerdon%27s_nightjaநீண்டவால் பக்கி". பார்த்த நாள் 30 செப்டம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:80
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்டவால்_பக்கி&oldid=2462937" இருந்து மீள்விக்கப்பட்டது