நி உவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நி உவா
Ni Hua
முழுப் பெயர்எளிய சீனம்: 倪华
பாரம்பரிய சீனம்: 倪華
நாடுசீனா
பிறப்புமே 31, 1983 (1983-05-31) (அகவை 40)
சாங்காய், சீனா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (2003)
பிடே தரவுகோள்2668 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2724 (ஏப்ரல் 2009)
தரவரிசைஇல. 71 (திசம்பர் 2021)

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் Ni.


நி உவா (Ni Hua) என்பவர் ஒரு சீன சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மற்றும் சீன நாட்டின் தேசிய சதுரங்க அணியின் தலைவரும் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அன்று சாங்காயில்[1] பிறந்தார். மூன்று முறை சீனாவின் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், 2003 ஆம் ஆண்டில் சீனாவின் 15 வது கிராண்ட்மாஸ்டர் என்ற சிறப்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19 ஆகும். ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில் நி உவா மற்றும் புவ் சியாங்சி இருவரும் சர்வதேச எலோ மதிப்பான 2700 புள்ளிகளைக் கடந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். முதலாவதாக வாங் யூ இச்சாதனையை எட்டியிருந்தார்.

41 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் நி உவாவும் ஒரு உறுப்பினர் ஆவார்.[2]

சதுரங்க வாழ்க்கை[தொகு]

நி உவா தன்னுடைய ஆறாவது வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான செங் தி லீ கோப்பையை 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் வென்றார். 1999 ஆம் ஆண்டில் உயர் வயதினருக்கான போட்டியிலும் இவ்வெற்றி தொடர்ந்தது.

2000 ஆம் ஆண்டில் இசுதான்புல்லில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் முதன்முதலாக பங்கேற்ற இவர் 5.5/9 புள்ளிகள் ஈட்டினார். பிப்ரவரி 2000 ஆம் ஆண்டில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர் போட்டியில் 7/10 புள்ளிகள் ஈட்டி தன்னுடைய முதலாவது கிராண்ட் மாஸ்டர் தகுதிப்புள்ளிகளை ஈட்டினார். தன்னுடைய இரண்டாவது கிராண்ட் மாஸ்டர் தகுதிப்புள்ளிகளை ஏப்ரல் 2001 இல் சூசௌவில் நடைபெற்ற சீனக் குழு சாம்பியன் போட்டியில் 6.5/10 புள்ளிகள் எடுத்து சாதித்தார். தனது மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் தகுதிப்புள்ளிகளை குவிங்தாவோ வில் 2002 இல் நடைபெற்ற தான் சின் நாம் கோப்பைப் போட்டியில் 6.5/9 புள்ளிகள் எடுத்து சாதித்தார். 2001 இல் நடைபெற்ற சீனா – அமெரிக்கா மீவுயர் போட்டியில் இவர் திமித்ரி சிநீடர் மற்றும் இக்காரு நாக்கமுரா ஆகியோருடன் விளையாடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தார்.

2003 ஆம் ஆண்டில் நி உவாவிற்கு கிராண்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ஆகத்து மாதம் 2004 ஆம் ஆண்டில் மலேசியாவின் கோலாலம்பூரில்[3][4] நடைபெற்ற போட்டியில் நி உவா முதலாவது தாடோ ஆர்தர் தான் போட்டியினை வென்றார். 2004 ஆம் ஆண்டு பிடே உலக சாம்பியன் போட்டியில் முதல்சுற்றில் இவர் இவ்கெனி விளாடிமிரோவை வீழ்த்தினார். ஆனால் சகநாட்டு யெ சியான்சுவானிடம் இரண்டாவது சுற்றில் இவர் வீழ்ந்தார்.[5]

நி உவா (இடது), மக்காவ்- இல் 2வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுகள்
ரெக்கியோ எமிலா சதுரங்க போட்டி, 2009

2005 நவம்பரில் இசுரேலின் பீர்செபாவில் நடைபெற்ற குழு சாம்பியன் போட்டியில் சீன அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ஒரு புள்ளி தேவை என்ற நிலையில் ஆர்மீனியாவின் காரென் ஆசிரியன் மற்றும் உருசியாவின் அலெக்சாண்டர் மோர்சோவிச்சு ஆகியவர்களிடம் தன்னுடைய இரண்டு ஆட்டங்களையும் இழந்தார். இதனால் உருசியா அப்போட்டியில் சாம்பியன் ஆனது[6]. பின்னர் அதே மாதத்தில் சதுரங்க உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றார். அப்போட்டியின் முதல் சுற்றில் வாசிலோசு கொட்ரோனியாசு இவரைத் தோற்கடித்தார்.

37 ஆவது சதுரங்க ஒலிம்ப்பியாடு போட்டியில் நி உவா 5.5/9 புள்ளிகள் எடுத்து சீன அணி வெள்ளிப் பதக்கம் பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இதுவே சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் ஆண்கள் பிரிவில் சீனா பெற்ற முதலாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[7] செப்டம்பர் 2006 இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பியு சியாங்சியுடன் கூட்டாக முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் போட்டியில் இரண்டாவது இடமே இவருக்குக் கிடைத்தது.[8]

2006[9] and 2007.[10] மற்றும் 2007 [11]என அடுத்தடுத்த ஆண்டுகளில் சீனாவின் சீன சதுரங்க சாம்பியன் போட்டியை தொடர்ச்சியாக வென்றார். 2007 இல் மனிலாவில் நடைபெற்ற பிராசுபெரோ பிச்சை கோப்பையை 7/9 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "中国国际象棋运动员等级分数据库". Chessinchina.net. Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
 2. "41st Chess Olympiad: China and Russia claim gold!". FIDE. 2014-08-15. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
 3. "Najdorf syndrome and the secret of the Filipinos". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
 4. "1st Dato' Arthur Tan Malaysia Open". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
 5. "FIDE WCC R2-2: 14 games in four days". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
 6. "Caught! Russians win the World Team Championship". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 2012-02-19.
 7. 37th Chess Olympiad 2006 Open Chess-Results
 8. 9th world University Chess Champions Chess-Results
 9. CHN Men Champ.2006 – CHN. FIDE.
 10. 2007 China Men's Individu – CHN. FIDE.
 11. 2007 China Men's Individu – CHN. FIDE.
 12. Prospero Pinchay Cup April 2008 FIDE Accessed 8 January 2015

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ni Hua
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நி_உவா&oldid=3540895" இலிருந்து மீள்விக்கப்பட்டது