நிர்மலா பெரியசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்மலா பெரியசாமி என்பவர் செய்தி வாசிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

குடும்பம்[தொகு]

இவர் கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். இவர் பெரியசாமி என்கிற பி.எஸ்.என்.எல் ஊழியரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்னேஷ் ஒரு மகன் உள்ளார்.[1]

தொலைக்காட்சியில்[தொகு]

இவர் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றினார். பொதிகை தொலைக்காட்சியில் ஏழு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.[1] பின்பு சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி செய்தார்.[2]

அரசியல்[தொகு]

இவர் 2003 அக்டோபர் 28 ஆம் நாள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருடன் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபுவும் அதிமுகவில் இணைந்தார்.[3] அதிமுக கட்சியின் நட்சத்திரப் பேச்சாரளாக அறியப்படுகிறார். இவர் அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை நட்சத்திரப் பேச்சாளர் போன்ற பல பதவிகள் வகித்தார்.[4]

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் அணியில் நிர்மலா பெரியசாமி இருந்தார்.[5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "'- Nirmala periyasamy slams solvathellam unmai Tv show". https://www.vikatan.com/. 29 December 2016. {{cite web}}: External link in |work= (help)
  2. V, KRISHNAVENI (6 July 2017). "- Nirmala periyasamy rejects 'bigg boss' offer!". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  3. Dinamalar (28 October 2013). "அதிமுக.,வில் இணைந்த பாத்திமா பாபு - நிர்மலா பெரியசாமி!! - Fathima Babu - Nirmala Periyasamy joints in ADMK". தினமலர் - சினிமா.
  4. "- Nirmala Periyasamy Slams MK Stalin". https://www.vikatan.com/. 26 February 2016. {{cite web}}: External link in |work= (help)
  5. R, JEYALAKSHMI (21 March 2017). "#VikatanExclusive - I will join another party, says Nirmala Periyasamy". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  6. "யார் உண்மையான துரோகி என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்துவார்கள்: நிர்மலா பெரியசாமி". இந்து தமிழ் திசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_பெரியசாமி&oldid=3378045" இலிருந்து மீள்விக்கப்பட்டது