நியூபவுண்ட்லாந்து (தீவு)
Nickname: "தி ராக்"[1][2] | |
---|---|
![]() நியூபவுண்ட்லாந்தில் உள்ள அம்பர் ஆறு; அக்டோபர் 2007இல் இலையுதிர்காலத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
புவியியல் | |
அமைவிடம் | அத்திலாந்திக்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 49°N 56°W / 49°N 56°W |
பரப்பளவு | 108,860 km2 (42,030 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 16th |
கரையோரம் | 9,656 km (6,000 mi) |
உயர்ந்த ஏற்றம் | 814 m (2,671 ft) |
உயர்ந்த புள்ளி | காபோக்சு |
நிர்வாகம் | |
மாகாணம் | நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் |
பெரிய குடியிருப்பு | செயின்ட் ஜான்ஸ் (மக். 200,600) |
மக்கள் | |
மக்கள்தொகை | 479,105[3] (2006) |
அடர்த்தி | 4.30 /km2 (11.14 /sq mi) |
இனக்குழுக்கள் | ஆங்கிலேயர், ஐரிய மக்கள், பிரெஞ்சுக்காரர், மற்றும் இசுக்காத்துலாந்தியர் |
மேலதிக தகவல்கள் | |
நீளமான ஆறு: எக்சுபிளாயிட்சு ஆறு (246 கிலோமீட்டர்கள் (153 mi))[4] அரசு: நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் அரசு <http://www.gov.nl.ca> கனடிய பொதுமக்களவையில் உறுப்பினர்கள்: 6 (மாகாணத்திலுள்ள 7 இல், மொத்தம் 308) கனடிய செனட்டில் உறுப்பினர்கள்: 6 (மாகாணத்தில் 6, மொத்தம் 105) மாகாணப் பேரவை உறுப்பினர்கள்: 44 ( 48 மொத்தம்) ![]() நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் கொடி கனடிய மாகாணம் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோரின் கொடியாக 1980 முதல் இன்றுவரை |
நியூபவுண்ட்லாந்து (Newfoundland) வட அமெரிக்கப் பெருநிலப்பகுதியின் கிழக்குக் கடலோரமாக உள்ள பெரிய கனடியத் தீவாகும். நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் பெரும்பாலான மக்கள் வாழும் தீவாகவும் உள்ளது. இந்தத் தீவு லாப்ரடோர் மூவலந்தீவிலிருந்து பெல் ஐல் நீரிணையாலும் கேப் பிரெடன் தீவிலிருந்து கபோட் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளது. செயின்ட் லாரென்சு ஆற்றின் முகத்துவாரத்தை அடைத்துக் கொண்டுள்ளதால் உலகின் மிகப் பெரும் கயவாயான செயின்ட் லாரன்சு வளைகுடா உருவாகியுள்ளது. நியூபவுண்ட்லாந்தின் பக்கத்துப் பகுதியாக பிரான்சிய கடல்கடந்த சமூகமான செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் உள்ளது.
108,860 சதுர கிலோமீட்டர்கள் (42,031 sq mi) பரப்பளவுள்ள[5] நியூபவுண்ட்லாந்து உலகின் 16ஆவது பெரும் தீவாகவும் கனடாவின் நான்காவது தீவாகவும் உள்ளது. மாகாணத் தலைநகரம், செயின்ட் ஜான்ஸ், தீவின் தென்கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ளது; தலைநகரத்தின் தெற்கில் உள்ள கேப் இசுப்பியர் வட அமெரிக்காவின் கிழக்குக் கோடி முனையாக (கிரீன்லாந்து நீங்கலாக) விளங்குகின்றது.
கனடாவின் 2006ஆம் ஆண்டு அலுவல்முறை கணக்கெடுப்பின்படி, நியூபவுண்ட்லாந்தின் 57% நபர்கள் பிரித்தானிய அல்லது ஐரிய மரபுவழியினராக கூறிக் கொள்கின்றனர்; 43.2% நபர்கள் குறைந்தது ஒரு ஆங்கிலப் பெற்றோரையும், 21.5% நபர்கள் ஒரு ஐரியப் பெற்றோரையும், 7% நபர்கள் குறைந்தது ஒரு இசுக்காட்டிய பெற்றோரையும் கொண்டுள்ளனர். தவிரவும் 6.1% பேர் குறைந்தது ஒரு பெற்றாராவது பிரான்சியராக கொண்டுள்ளனர்.[6] 2006 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்டொகை 479,105 ஆகும்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Dekel, Jon (22 July 2014). "Shaun Majumder brings Burlington, Newfoundland, to the world with Majumder Manor". National Post இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6RQnL75iy?url=http://arts.nationalpost.com/2014/07/22/shaun-majumder-brings-burlington-newfoundland-to-the-world-with-majumder-manor/. பார்த்த நாள்: 29 July 2014. "After all, it’s not every day the a famous native son of The Rock returns to its capital."
- ↑ Gunn, Malcolm (10 July 2014). "The term "go anywhere" has been redefined with the redesign of a family favorite". Milwaukee Journal Sentinel இம் மூலத்தில் இருந்து 29 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6RQnSWTRj?url=http://www.jsonline.com/autos/268620422.html. பார்த்த நாள்: 29 July 2014. "Canada's 10th province is called "The Rock" for good reason."
- ↑ "2006 Statistics Canada National Census". Statistics Canada. July 28, 2009. http://www12.statcan.gc.ca/census-recensement/2006/dp-pd/hlt/97-550/Index.cfm?TPL=P1C&Page=RETR&LANG=Eng&T=101.
- ↑ "Atlas of Canada – Rivers". Natural Resources Canada. October 26, 2004 இம் மூலத்தில் இருந்து மே 20, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060520164022/http://atlas.nrcan.gc.ca/site/english/learningresources/facts/rivers.html. பார்த்த நாள்: April 19, 2007.
- ↑ "Atlas of Canada, Islands" இம் மூலத்தில் இருந்து ஜனவரி 22, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130122002132/http://atlas.nrcan.gc.ca/site/english/learningresources/facts/islands.html. பார்த்த நாள்: July 19, 2006.
- ↑ "2006 Statistics Canada National Census: Newfoundland and Labrador". Statistics Canada. July 28, 2009 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 15, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110115234229/http://www40.statcan.gc.ca/l01/cst01/demo26b-eng.htm.