லாப்ரடோர் மூவலந்தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாப்ரடோர் மூவலந்தீவு, கனடா

லாப்ரடோர் மூவலந்தீவு (Labrador Peninsula) கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள பெரிய மூவலந்தீவு ஆகும். இதன் மேற்கே அட்சன் விரிகுடாவும் வடக்கில் அட்சன் நீரிணையும் கிழக்கில் லாப்ரடோர் கடலும் தென்கிழக்கில் செயின்ட் லாரன்சு வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் அங்கமான லாப்ரடோர் இந்த மூவலந்தீவில்தான் உள்ளது. கியூபெக் மாகாணத்தின் சகுனே-லாக்-செயின்ட் ழான், கோட்-நோர்டு, நோர்டு-டு-கியூபெக் பகுதிகளும் இந்த மூவலந்தீவில் உள்ளன. இந்த மூவலந்தீவில் ஏறத்தாழ 150,000 (2006 கணக்கெடுப்பு) பேர் வாழ்கின்றனர். இதன் பரப்பு 1,400,000 km2 (541,000 sq mi) ஆகும்; இது உலகின் நான்காவது பெரிய மூவலந்தீவாக உள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாப்ரடோர்_மூவலந்தீவு&oldid=3591571" இலிருந்து மீள்விக்கப்பட்டது