உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோபார் பூனைப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோபார் பூனைப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
போயிகா
இனம்:
போ. வாலாச்சி
இருசொற் பெயரீடு
போயிகா வாலாச்சி
தாசு, 1998[2]

நிக்கோபார் பூனைப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படும் போயிகா வாலாச்சி (Boiga wallachi) கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த பின்புறம் நோக்கி விடப்பல்லினைக் பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

புவியியல் வரம்பு

[தொகு]

போ. வாலாச்சி பெரிய நிக்கோபார் மற்றும் சிறிய நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது.[1][3]

சொற்பிறப்பியல்

[தொகு]

வாலாச்சி என்ற குறிப்பிட்ட சிற்றினப் பெயர், அமெரிக்க ஊர்வனவியலாளர் வான் வாலாக்கின் நினைவாக இடப்பட்டுள்ள.[2][4]

விளக்கம்

[தொகு]

போ. வாலாச்சி இப்பேரினத்தில் உள்ள சிற்றினங்களில் நடுத்தர அளவிலானது. இதன் நீளம் மூக்குத்தண்டிலிருந்து குதம் வரை 73.5 முதல் 105.0 செ.மீ வரை இருக்கும். கண்கள் பெரியவை. தோள்பட்டை இலவங்கப்பட்டை நிறத்தில் ஓரங்களில் பழுப்பு நிற ஆலிவ் நிறமாகக் காணப்படும். வயிறு அடர் வண்ணத்தில், வட்டமான புள்ளிகளுடன் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

சூழலியல்

[தொகு]

போ. வாலாச்சி இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும் பாம்பு. இது இடையூறு இல்லாத வெப்பமண்டல ஈரமான காடுகளில், 300 முதல் 400 மீட்டர் உயரப் பகுதிகளில் வாழ்கிறது. இது நிலப்பரப்பில் வாழும் பாம்பாகும். முட்டைகளை உணவாக உட்கொள்ளும் இப்பாம்பின் மற்ற இரை தவளைகளும் சிறிய விலங்குகளும் ஆகும்.[1]

இனப்பெருக்கம்

[தொகு]

போ. வாலாச்சி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]

பாதுகாப்பு

[தொகு]

2013ஆம் ஆண்டு நிலவரப்படி போ. வாலாச்சி எண்ணிக்கை நிலையானதாகத் தோன்றியது. இருப்பினும் இவை 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது கணிசமாகக் குறைந்திருக்கலாம். போ. வாலாச்சி தீவனத்திற்காக மானுடவியல் வாழ்விடங்களுக்குள் நுழைகிறது. இத்தகைய சூழலில் இவை தொடர்ந்து இந்த வாழ்விடங்களில் இருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சிற்றினம் பெரிய நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகத்திற்குள் காணப்படுகின்றன. இருப்பினும் இந்த வாழிடத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Srinivasulu, C.; Das, A.; Mohapatra, P. (2013). "Boiga wallachi". IUCN Red List of Threatened Species 2013: e.T172682A1366220. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T172682A1366220.en. https://www.iucnredlist.org/species/172682/1366220. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. 2.0 2.1
    fr:Indraneil Das (1998). "A new species of Boiga (Serpentes: Colubridae) from the Nicobar Archipelago". Journal of South Asian Natural History 3 (1): 59–67. http://static1.1.sqspcdn.com/static/f/1199264/18692424/1339428435453/Das%2BI.%2BA%2Bnew%2Bspecies%2Bof%2BBoiga%2BSerpentes%2B-%2BColubridae%2Bfrom%2Bthe%2BNicobar%2BArchipelago.pdf.  (Boiga wallachi, new species).
  3. 3.0 3.1 Boiga wallachi at the Reptarium.cz Reptile Database. Accessed 28 December 2015.
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Boiga wallachi, p. 279).

மேலும் வாசிக்க

[தொகு]