நிகழ்வெண்
புள்ளியியலில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண் (frequency) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட சமவாய்ப்புச் சோதனையின் போது அந்நிகழ்ச்சி எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் எண்ணாகும்.[1] என்ற நிகழ்ச்சியின் நிகழ்வெண் எனக் குறிக்கப்படுகிறது. வரைபடங்களில் இந்நிகழ்வெண்கள், நிகழ்வெண் செவ்வகப்படங்கள் மூலம் குறிக்கப்படுகின்றன.
- சார்புடை நிகழ்வெண்
தொகுப்பு நிகழ்வெண் என்பது ஒரு வரிசைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் பட்டியலில் குறிப்பிட்ட புள்ளியில் அல்லது அதற்குக் கீழேயுள்ள அனைத்து நிகழ்வுகளின் தனிப்பட்ட அதிர்வெண்களின் மொத்தமாகும். ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண்ணை மொத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைப்பது அந்நிகழ்ச்சியின் சார்புடை நிகழ்வெண் (relative frequency) ஆகும்.[2]
அனைத்து நிகழ்ச்சிகளின் () சார்புடை நிகழ்வெண்களின் () மதிப்புகளை வரைபடத்தில் குறித்தால் நிகழ்வெண் பரவல் கிடைக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kenney, J. F.; Keeping, E. S. (1962). Mathematics of Statistics, Part 1 (3rd ed.). Princeton, NJ: Van Nostrand Reinhold.
- ↑ Kenney, J. F.; Keeping, E. S. (1962). Mathematics of Statistics, Part 1 (3rd ed.). Princeton, NJ: Van Nostrand Reinhold.