சோதனை (நிகழ்தகவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ்தகவுக் கோட்பாட்டில், வரையறுக்கப்பட்ட முடிவுகளைக் கொண்ட செயல் சோதனை எனப்படுகிறது. ஒரு செயலைச் செய்யும்போது நிகழக்கூடிய விளைவுகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.

ஒரேயொரு முடிவுமட்டும் கொண்ட சோதனை தீர்மானிக்கப்பட்ட சோதனையாகும். (Deterministic experiment)

ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளைக் கொண்ட ஒரு சோதனையில், சோதனை நடப்பதற்கு முன்பாகவே எந்த முடிவு நிகழுமென முன்கூட்டியேத் தீர்மானிக்க முடியாதென்றால் அச்சோதனை குறிப்பில்வழிச் சோதனையாகும். (Random experiment)

எடுத்துக்காட்டு[தொகு]

தீர்மானிக்கப்பட்ட சோதனை[தொகு]

அறிவியல் மற்றும் அதுபோன்ற பிறதுறைகளில் உள்ள விதிகளை நிறுவ நடத்தப்படும் எல்லா சோதனைகளும் தீர்மானிக்கப்பட்ட சோதனைகளாகும்.

சமவாய்ப்புச் சோதனை[தொகு]

ஒரு நாணயத்தைச் சுண்டுதலும், ஒருபகடையை வீசுதலும் சமவாய்ப்புச் சோதனைகள்.

ஒரு நாணயத்தைச் சுண்டினால் கிடைக்கக் கூடிய முடிவுகள் தலை அல்லது பூ என்று தெரிந்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முயற்சியின்போது இரண்டில் எது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

அதேபோல் ஒரு பகடையை வீசும்போது விழக்கூடிய சாத்தியமான எண்கள் 1,2,3,4,5,6 என்று தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட ஒரு முயற்சியில் நிச்சயமாக இந்த எண் தான் விழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதனை_(நிகழ்தகவு)&oldid=2744594" இலிருந்து மீள்விக்கப்பட்டது