நிகழ்வெண் செவ்வகப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புள்ளியியலில், நிகழ்வெண் செவ்வகப்படம் (Histogram) அல்லது பட்டை வரைபடம் என்பது தரவுகளின் பரவலை காட்சிப்படுத்தும் ஒர் வரைபடம் ஆகும். இது ஒரு தொடர் மாறியின் நிகழ்தகவு பரவல் மதிப்பீட்டைக் காட்சிப்படுத்துகிறது. அதாவது ஒரு தரவு அல்லது மாறியின் மதிப்பு எத்தனை தடவைகள் நிகழ்ந்தன என்பதை இந்த வரைபடம் எடுத்துரைக்கிறது. என்ன மதிப்புகள் அதிகம் இடம்பெற்றன என்பதை எளிதாக கண்டுபிடிக்கவும், மதிப்புகள் என்ன நிகழ்தகவு கோட்டில் நிகழ்ந்தன போன்ற கேள்விகளுக்கு பதில் தரவும் இவை உதவுகின்றன.