நிகழ்வெண் பரவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புள்ளியியலில் நிகழ்வெண் பரவல் (Frequency distribution) என்பது ஒரு தரவின் சீர்படுத்தி அமைக்கப்பட்ட வடிவமாகும். இதில் தரவின் சில மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தோன்றும் போது ஒவ்வொரு மதிப்பும் எத்தனை முறை நிகழ்கின்றதோ அந்த எண்ணிக்கை அதன் நிகழ்வெண்ணாகக் குறிக்கப்பட்டு, தரவு முழுமையும் சுருக்கமான அட்டவணை வடிவில் தரப்படுகிறது. இவ்வட்டவணை நிகழ்வெண் அட்டவணை எனப்படுகிறது. ஒரு தரவு, நிகழ்வெண் அட்டவணை வடிவில் இருந்தால் அதன் தன்மையைப் புரிந்து கொள்வது எளிது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • 20 மாணவர் கொண்ட வகுப்பொன்றில் கணிதத்தில் நடத்தப்பட்ட தேர்வில் அம்மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் நிகழ்வெண் அட்டவணை:
மதிப்பெண் நிகழ்வெண்
(மாணவர் எண்ணிக்கை)
23 2
35 3
40 5
49 4
52 2
67 1
98 2
100 1

முழுத் தரவும் வரிசையாக எழுதப்பட்டிருப்பதை விட இவ்வாறு அட்டவணையாகத் தரப்படும்போது அந்த குறிப்பிட்டத் தேர்வில் மாணவர்களின் திறனை எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது.

  • குறிப்பிட பிரிவு இடைவெளிகளுக்குள் அமையும் மதிப்புகளின் எண்ணிக்கைகளாகவும் நிகழ்வெண் அட்டவணை அமையலாம்:
உயர இடைவெளி நிகழ்வெண்
(மாணவரின் எண்ணிக்கை)
குவி நிகழ்வெண்
4.5–5.0 அடி 25 25
5.0–5.5 அடி 35 60
5.5–6 அடி 20 80
6.0–6.5 அடி 20 100
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்வெண்_பரவல்&oldid=1663737" இருந்து மீள்விக்கப்பட்டது