நா. ராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. ராஜேந்திரன் (N. Rajendren) ஒரு வரலாற்றாசிரியர் ஆவார்.[1] இவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், வரலாற்றுத்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ஆகவுள்ளார்.

பிறப்பு[தொகு]

இவர் 25.07.1956 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் நாரயணன். சென்னை பச்சையப்பா கல்லுரியில் வரலாறு முதுகலைப்பட்டம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை நிறைஞர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றபின் தாம் பயின்ற சென்னை பச்சையப்பா கல்லுரியில் 1982 முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணி புரிந்தார். அதைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக்த்தில் வரலாற்றுத்துறை பேராசியராகச் செயல்பட்டு வருகிறார்.

பணிகள்[தொகு]

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை அமைவதற்கு உறுதுணையாக இருந்தவர். இவரது ’’தமிழ்நாட்டில் தேசிய இயக்கம்’’ என்ற வரலாற்றாய்வு கட்டுரைக்கு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் “Citation of Meritorious Achievement” என்ற பாராட்டைப் பெற்றார். இப்புத்தகத்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் 1994 இல் வெளியிட்டது. 50 க்கும் மேற்பட்ட வரலாற்றுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். புதுடெல்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் தமிழ்நாடு மேல்நிலைக்கல்வி வரலாறு பாடப்புத்தகம் வல்லுநர் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._ராஜேந்திரன்&oldid=3248312" இலிருந்து மீள்விக்கப்பட்டது