நா. சண்முகதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாகலிங்கம் சண்முகதாசன் (N. Shanmugathasan, 1920 - பெப்ரவரி 8, 1993) ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியும் ஆவார்.

யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் 1943 இல் பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் "ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு" (A Marxist looks at the History of Ceylon என்ற நூலை எழுதினார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சண்முகதாசன்&oldid=1707222" இருந்து மீள்விக்கப்பட்டது