நாராயண் மேகாஜி லோகண்டே
நாராயண் மேகாஜி லோகண்டே | |
---|---|
2005இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் லோகண்டே | |
பிறப்பு | 1848 தானே, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | 9 பிப்ரவரி 1897 மும்பை, இந்தியா |
அரசியல் இயக்கம் | இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் |
நாராயண் மேகாஜி லோகண்டே (Narayan Meghaji Lokhande) (1848-1897) இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை ஆவார்.[1] இவர் 19ஆம் நூற்றாண்டில் துணி ஆலைகளின் பணி நிலைமைகளை மேம்படுத்தியதற்காக மட்டுமல்லாமல், சாதி , வகுப்புவாத பிரச்சினைகளில் தனது தைரியமான முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறார்.[2] நாராயண் மேகாஜி லோகண்டே, மகாத்மா ஜோதிராவ் புலேவின் முக்கிய சகா. இந்திய அரசு 2005இல் இவரது புகைப்படத்துடன் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.
குடும்பம்
[தொகு]இவர் புனே மாவட்டத்தில் கன்ஹெர்சரைச் சேர்ந்த மாலி குடும்பத்தில் பிறந்தார்.[3] இவர் உயர்நிலைப் பள்ளி வரை படித்திருந்தார். இவரது மனைவி பெயர் கோபிகாபாய், இவர்களுக்கு கோபிநாத் என்ற மகன் இருந்தார்.
சமூகப் பங்களிப்பு
[தொகு]சத்யசோதாக் சமாஜ இயக்கத்தின் இரண்டாம் ஆண்டில் 1874இல் உறுப்பினரானார்.[4]
லோகண்டே, இந்தியாவின் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். 1880 முதல் மும்பையிலிருந்து வெளியிடப்பட்ட தீனபந்து என்ற மராட்தி இதழின் நிர்வாகத்தை இவர் ஏற்றுக்கொண்டார். இந்த நேரத்தில் இவர் மும்பையிலுள்ள ஒரு பருத்தி ஆலையில் தலைமை எழுத்தராக இருந்த வேலையை விட்டுவிட்டு மில்ஹேண்ட்ஸ் சங்கத்தை நிறுவி, சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.[4] இவர் மும்பை கம்கார் சங்கத்தையும் நிறுவினார்.
லோகண்டேவுடன், ஜோதிராவ் புலே மும்பையில் துணி ஆலைத் தொழிலாளர்களின் கூட்டங்களிலும் உரையாற்றினார். புலேவும் அவரது சகாக்களான கிருஷ்ணாராவ் பாலேக்கர், லோகண்டே ஆகியோர் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒழுங்கமைக்க முயற்சிப்பதற்கு முன், எந்தவொரு நிறுவனமும் தங்கள் குறைகளைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[5] இவர் இந்தியாவில் 'பாம்பே மில் ஹேண்ட்ஸ் அசோசியேஷன்' என்ற முதல் தொழிலாளர் சங்கத்தை தொடங்கினார்
முக்கியப் பணிகள்
[தொகு]இவரது முயற்சி காரணமாக சில உரிமைகளை ஆலைத் தொழிலாளர்கள் பெற்றனர்: [6]
- ஆலைத் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிக்க வேண்டும்.
- பிற்பகலில், தொழிலாளர்களுக்கு அரை மணி நேர இடைவெளியை வழங்க வேண்டும்.
- ஆலை காலை 6:30 மணியிலிருந்து செயல்பட ஆரம்பித்து சூரியன் மறைவதற்குள் மூடப்பட வேண்டும்.
- தொழிலாளர்களின் சம்பளம் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும்.
இவருக்கு பிரித்தானிய அரசு 'ராவ் பகதூர்' என்ற பட்டத்தை வழங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pandit, Nalini (1997). "Narayan Meghaji Lokhande: The Father of Trade Union Movement in India". Economic and Political Weekly 32 (7): 327–329. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4405089.
- ↑ Pandit, Nalini (1997). "Narayan Meghaji Lokhande: The Father of Trade Union Movement in India". Economic and Political Weekly 32 (7): 327–329.. Apart from this he was also awarded the title of Rao Bahadur in 1895 for his work during riots between Hindus and Muslims. "Justice of peace" was awarded with great respect to him by the then British Indian Government.
- ↑ https://vishwakosh.marathi.gov.in/32147/
- ↑ 4.0 4.1 Omvedt, Gail (2011). Cultural Revolt in a Colonial Society: The Non-Brahman Movement in Western India. New Delhi: Manohar. pp. 292–293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7304-927-9.
- ↑ "Mahatma Jotirao Govindrao Pule". Bahujan Samaj Party India. Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
- ↑ Sarkar, Aditya (2018). Trouble at the Mill: Factory Law and the Emergence of the Labour Question in Late Nineteenth-Century Bombay. New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199093298.