உள்ளடக்கத்துக்குச் செல்

நான்காம் கோவிந்தராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் கோவிந்தராசன்
கோரி அரசமரபின் ஆட்சியாளர்கள் ( சாகம்பரியின் சௌகான்கள் )
ஆட்சிக்காலம்ஆட்சி 1192 பொ.ச.
முன்னையவர்பிருத்திவிராச் சௌகான்
பின்னையவர்அரிராஜன்
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்
தந்தைபிருத்திவிராச் சௌகான்

கோவிந்தராஜா IV (Govindaraja IV) (ஆட்சி சுமார் 1192 பொ.ச.) இன்றைய வடமேற்கு இந்தியாவில் உள்ள சபடலக்ச நாட்டை ஆண்ட சகாம்பரி சகமான வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். கோரி படையெடுப்பாளர்கள் இவரது தந்தை மூன்றம் பிரித்திவிச்ராசனை தோற்கடித்து கொன்றனர். அப்போது இவர் உரிய வயதை அடையாமல் இருந்தபோதும் சகமான இராச்சியத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். கோரி ஆட்சியை ஏற்றுக்கொண்டதற்காக இவரது மாமா அரிராஜா இவரை பதவி நீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து, இவர் சகமான வம்சத்தின் இரணதம்பபுரத்தின் சகாமனா புதிய கிளையை இன்றைய ரந்தம்பூரில் நிறுவினார்.

ஆட்சி

[தொகு]

கோவிந்த ராஜா பிருத்திவிராச் சௌகான் என்ற சகமான மன்னனுக்கு பிறந்தவர். 16 ஆம் நூற்றாண்டின் தாரிக்-இ- பெரிஷ்தா இவரை "கோலா" என்று பெயரிட்டது. இது "கோவிந்தா" என்பதாகவும் "குவா " என்பதன் தவறான எழுத்துப்பெயர்ப்பாகவும் இருக்கலாம். [1]

கிபி 1192 இல், கோரிகள் சகமான இராச்சியத்தின் மீது படையெடுத்து, கோவிந்தராஜாவின் தந்தையை தோற்கடித்து கொன்றனர். கோரி முகமது கோவிந்தராஜனை ஆட்சியாளராக நியமித்தார். [2]

இவரது குறுகிய ஆட்சியின் போது, தில்லி மற்றும் ஹான்சி உட்பட கிளர்ச்சியாளர் சகமான ஆளுநர்களை கோரிகள் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். [3] இவரது மாமா அரிராஜா, அஜ்மீரில் கோரி ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். கோவிந்தராஜாவை ரந்தம்பூர் கோட்டையில் தஞ்சம் அடையச் செய்தார். கோரியின் ஆளுநர் குத்புத்தீன் ஐபக் தில்லியிலிருந்து ரந்தம்பூருக்கு விரைந்தார். மேலும் அரிராஜாவின் இராணுவத்தை பின்வாங்கும்படி கட்டாயப்படுத்தினார். கோவிந்தராஜா கோரி ஆளுநருக்கு தனது நன்றியைத் தெரிவிக்க மூன்று தங்க முலாம்பழங்களை பரிசாக வழங்கினார். [4]

பின்னர் கோவிந்தராஜா அஜ்மீர் திரும்பினார். இருப்பினும், கிபி 1193 இல், அரிராஜா மீண்டும் அஜ்மீர் மீது படையெடுத்தார். போர் பிருத்விராஜாவின் கிளர்ச்சித் தளபதிகளால் ஆதரிக்கப்பட்டது. மீண்டும், கோவிந்தராஜா ரந்தம்பூருக்கு தப்பி ஓட வேண்டியிருந்தது. இந்த நேரத்தில், அரிராஜா அஜ்மீரை ஆக்கிரமிக்க முடிந்தது, மேலும் புதிய சகமான மன்னரானார். [5] அரிராஜா கிபி 1194 இல் கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இதற்கிடையில், கோவிந்தராஜாவுக்கு ரந்தம்பூரின் பதவி வழங்கப்பட்டது. [6] இவரது மகன் வல்கணன் (அல்லது பல்கணன்) இவருக்குப் பின் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளராக ரந்தம்பூர் அரியணையில் அமர்ந்தார். [7]

சான்றுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_கோவிந்தராசன்&oldid=3423772" இலிருந்து மீள்விக்கப்பட்டது