உள்ளடக்கத்துக்குச் செல்

இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள்
பொ.ச.1192–பொ.ச.1301
தலைநகரம்இரணதம்பபுரம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
பொ.ச.1192
• முடிவு
பொ.ச.1301
முந்தையது
பின்னையது
சாகம்பரியின் சுகான்கள்
தில்லி சுல்தான்கள்
தற்போதைய பகுதிகள்இந்தியா
Map
Ranthambore in present-day India
ரந்தம்பூர் கோட்டை

இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள் (Chahamanas of Ranastambhapura) 13ஆம் நூற்றாண்டின் இந்தியாவில் ஆட்சி செய்து வந்த ஒரு அரச வம்சத்தினராவர். இவர்கள் இன்றைய இராஜஸ்தானில் தங்கள் தலைநகரான இரணதம்பபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியை (இரன்தம்போர்) ஆட்சி செய்தனர். ஆரம்பத்தில் தில்லி சுல்தானகத்தின் அடிமை ஆட்சியாளர்களாக இருந்தனர். பின்னர் சுதந்திரம் பெற்றனர். சௌகான்) குலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இராஜஸ்தானி பாணர்களின் இலக்கியத்தில் இரணதம்போரின் சௌகான்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இரணதம்பபுரத்தின் சகாமனாக்களின் வம்சம் நான்காம் கோவிந்தராசனால் நிறுவப்பட்டது. அவர்கள் சாகம்பரியின் சௌகான் மன்னரான தனது தந்தை மூன்றாம் பிருத்திவிராசனைத் தோற்கடித்த பிறகு, இவர் 1192இல் கோரிகளின் அடிமை ஆட்சியாளராக இருக்க ஒப்புக் கொண்டார். இவரது வழித்தோன்றல்கள் 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானகத்திடம் பலமுறை சுதந்திரம் பெற்று அதை இழந்தனர். வம்சத்தின் கடைசி மன்னரான ஹம்மிரதேவன், விரிவாக்கக் கொள்கையைக் கொண்டிருந்தார். மேலும் பல அண்டை இராச்சியங்களைத் தாக்கினார். 1301இல் இரன்தம்போர் முற்றுகையின் போது தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சிக்கு எதிராக அவர் தோல்வியடைந்ததன் மூலம் வம்சம் முடிவுக்கு வந்தது.

வரலாறு

[தொகு]

இரணதம்பபுரத்தின் சகாமனா வம்சம் சாகாம்பரி சௌகான் குடும்பத்தைச் சேர்ந்த கோவிந்தராசனால் நிறுவப்பட்டது (அஜ்மீரின் சௌகான்கள் என்றும் அறியப்படுகிறார்கள்). [1] கோரி முகமது கோவிந்தராசனை அஜ்மீரில் தனது ஆட்சியாளாக நியமித்தார். இருப்பினும், பிருத்விராசனின் சகோதரர் அரி-ராசன் அவரை அரியணையில் இருந்து அகற்றினார். மேலும் அவரே அஜ்மீரின் ஆட்சியாளரானார். [2] கோவிந்தராசன் இரணதம்பபுரத்தில் (நவீன ரந்தம்போர்) ஒரு புதிய அரசை நிறுவினார். அஜ்மீரை முஸ்லிம்கள் கைப்பற்றிய பிறகு, அவர் அரிக்கு அடைக்கலம் கொடுத்தார். [1]

கோவிந்தராசனின் மகனான பல்கனன், கிபி 1215 இல் டெல்லி சுல்தான் இல்த்துமிசின் ஆட்சியாளராகப் பதிவு செய்யப்பட்டார். ஆனால் பிற்காலத்தில் சுதந்திரமாக ஆட்சி செய்வதாக அறிவித்தார். [1] பல்கனனுக்குப் பின்ன் ஆட்சிக்கு வந்த அவரது மூத்த மகன் பிரகலாதன் ஒரு சிங்க வேட்டையில் இறந்தார். பிரகலாதனின் மகன் வீரநாராயணனை இல்த்துமிசுவை தில்லிக்கு அழைத்து அங்கே நஞ்சு வைத்து கொன்றார். [3] இல்த்துமிசு 1226இல் கோட்டையைக் கைப்பற்றினார். பல்கனனின் இளைய மகன் வகாபட்டன் பின்னர் அரியணை ஏறினார். தில்லி ஆட்சியாளர் ரசியாவின் ( 1236-1240) ஆட்சியின் போது இவர் இரனதம்பூரை மீண்டும் கைப்பற்றினார். அவர் 1248 - 1253 இல் தில்லி சுல்தானகத்தின் படையெடுப்புகளுக்கு எதிராக கோட்டையை வெற்றிகரமாக பாதுகாத்தார். [1]

வாகபட்டனின் மகன் சைத்ரசிம்மன் மால்வாவின் பரமாரர்களுக்கு எதிராகவும், பிற தலைவர்களுக்கு எதிராகவும் இராணுவ வெற்றிகளைப் பெற்றார். இருப்பினும், அவர் தனது இறையாண்மையை நசீர்-உத்-தினிடம் இழந்தார். மேலும் தில்லி சுல்தானகத்திற்கு திரை செலுத்தினார். [1]

வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான ஹம்மிரதேவன் அதன் மிக சக்திவாய்ந்த ஆட்சியாளராகவும் இருந்தார். இவர் 1283 - 1289 இடையே ஆட்சி செய்தார்.[4] நயச்சந்திரன் என்ற கவிஞர் எழுதிய ஹம்மிரா மகாகாவ்யம் என்ற, இவரது வாழ்க்கை வரலாறு, அந்த காலகட்டத்திலிருந்து இப்பகுதியின் வரலாற்றின் சில முஸ்லிம் அல்லாத ஆதாரங்களில் ஒன்றாகும். மேலும் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் சரித்திரங்களின் கணக்குகளை சரிபார்க்க உதவுகிறது.[1] பொ.ச.1288 தேதியிட்ட பல்வான் கல்வெட்டு, மால்வாவின் பரமார அரசன் இரண்டாம் அர்ச்சுனனின் யானைப் படையை ஹம்மிரதேவன் கைப்பற்றியதாகக் குறிப்பிடுகிறது. [5] அர்ச்சுனனின் வாரிசான இரண்டாம் போஜனையும் தோற்கடித்து, சித்தோர்காருக்கு அணிவகுத்துச் சென்று, மேவாரைக் கைப்பற்றி, அபுவின் பரமாரா மன்னனுக்கு அடிபணியச் செய்ததாக ஹம்மிர-மஹாகாவ்யம் கூறுகிறது.[6] பின்னர், அவர் வர்த்தமானபுரத்தை சூறையாடி, புஷ்கர், சாகம்பரி மற்றும் பல இடங்களை கைப்பற்றி தனது தலைநகருக்குத் திரும்பினார்.[1] மற்ற இந்துத் தலைவர்களுடன் ஹம்மிரனின் போர்கள் முஸ்லிம் தில்லி சுல்தானகத்திற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க முடியவில்லை. ஜலாலுதீன் மற்றும் அலாவுதீனின் தளபதி உலுக் கான் ஆகியோரின் படையெடுப்புகளை அவர் வெற்றிகரமாக எதிர்த்தார். ஆனால் இறுதியாக 1301ஆம் ஆண்டு அலாவுதீன் கில்சி தலைமையிலான படையெடுப்பில் கொல்லப்பட்டார். [1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Sen 1999, ப. 336.
  2. Narayan 1999, ப. 10.
  3. Sudan 1989, ப. 76.
  4. Sharma 1970, ப. 828.
  5. Sharma 1975, ப. 124.
  6. Majumdar 1966.

உசாத்துணை

[தொகு]