நாக நதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகநதி (Naganathi River) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் சவ்வாது மலையில் உற்பத்தியாகி ஆரணி வழியாக வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. நாகநதி ஆறு ஆரணி வட்டம், செய்யார் வட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. நாகநதியின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 366 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். 60 சதவீதம் வேலூர் மாவட்டத்திலும், மீதம் 40 சதவீதம் திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளன. வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மழைக்காலங்களில் நாகநதி ஓடையில் வரும் தண்ணீர் வீணாக ஏரி, குளம், குட்டைகளில் தேங்கி ஆவியாவதை தடுத்து நேரடியாக பூமிக்குள் செலுத்தக்கூடிய உறை கிணறுகள் 354 இடங்களில் அமைக்கப்பட்டதால், இப்பகுதியில் உள்ள கிராமங்களில் 50 முதல் 70 அடி மட்டத்தில் திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் கிடைத்து வருகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. நாகநதியை மீட்ட பெண்கள்
  2. மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் 'நாகநதி' குறித்துப் பாராட்டிப் பேசிய பிரதமர்
  3. "மோதியை கவர்ந்த 'நாகநதி' ஆறு - வறண்ட ஆறுக்கு உயிர் தந்த தமிழக பெண்கள்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_நதி_ஆறு&oldid=3784139" இலிருந்து மீள்விக்கப்பட்டது