நாக்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக்னி

நாக்னி (Nacnī) என்றால் வட இந்திய மொழிகளில் பெண் நடனக் கலைஞர் என்று பொருள். கிழக்கு-மத்திய இந்திய மாநிலங்களான ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசாவில், நாக்னி (நுச்-நீ என்று உச்சரிக்கப்படும் "நடனக் கலைஞர்") கிராமப்புறங்களில் தொழில்ரீதியாகப் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் வரும் பெண் கலைஞர்களைக் குறிக்கிறது, ஆண் கலிஞர்கள் துல்கி மற்றும் நகரா முரசுகளை இசைத்து மேடையைச் சுற்றி வருகிறார்கள்.[1][2]

நாக்னிகளாக நடிக்கும் பெண்கள் "வைத்திருக்கும் பெண்கள்" என்று கருதப்படுவார்கள். பொதுவாக உயர் சாதியைச் சேர்ந்த ஆண்களுக்கும் நடனக் கூட்டாளியுடனும் முறைசாரா "திருமணத்தில்" இணையாக இருப்பார்கள்.[3][4] நாக்னிகள் ராதையை உருவகப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஆண் நடனக் கூட்டாளி கிருட்டிணனாக கருதப்படுகிறார்கள். கலைஞர்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் பல வழிகளில் வழக்கமான இந்திய சாதி மற்றும் பாலின வேறுபாடுகளை மேடையிலும் வெளியேயும் மீறுகிறார்கள், அவர்களின் "ரசிகர்கள்" மத்தியில் ஒரு குறிப்பிட்ட அதிகாரப் பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் பெரும்பாலும் குடி மற்றும் புகைபிடித்தல் போன்ற "பொதுவாக ஆண்" நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள்.[5][6]தற்காலத்தில் இந்த பாணி செயல்திறன் வேகமாக மறைந்து வருகிறது.[7]

சான்றுகள்[தொகு]

  1. Babiracki, Carol M. (2008), "Between Life History and Performance: Sundari Devi and the Art of Allusion", Ethnomusicology, 52:1: 1–5
  2. Citron, Marcia J. (2005), "Women's Voices across Musical Worlds (review)", Music and Letters, 86: 508–512, doi:10.1093/ml/gci090
  3. Feldman & Gordon (2006). The courtesan's arts: cross-cultural perspectives. New York: Oxford University Press. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195170290. https://books.google.com/books?id=U-iuYBiOkRgC&q=nacn%C4%AB&pg=PA118. 
  4. Babiracki, Carol M. (2008), "Between Life History and Performance: Sundari Devi and the Art of Allusion", Ethnomusicology, 52:1: 3–6
  5. Soren, Ragnhild (1999), Gendered Images of Music and Musicians (PDF)
  6. Babiracki, Carol M. (2008), "Between Life History and Performance: Sundari Devi and the Art of Allusion", Ethnomusicology, 52:1: 5–6
  7. Feliciano, Rita (2006), "Kathak at the Crossroads: Innovation Within Tradition", Dance View Times, 4:35
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்னி&oldid=3774687" இலிருந்து மீள்விக்கப்பட்டது