நாகின் (1976 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகின்
இயக்கம்ராஜ்குமார் கோஹ்லி
தயாரிப்புராஜ்குமார் கோஹ்லி
திரைக்கதைஜக்கிராம் பவுல்
சரன்தாஸ் ஷோக்
இசைலக்ஷ்மிகாந்த் பியார்லால்
நடிப்புசுனில் தத்
பெரோஸ் கான்
ரீனா ராய்
ஜீதேந்திரா
வினோத் மெஹ்ரா
ரேகா
மும்தாஜ்
கபீர் பேடி
படத்தொகுப்புஷ்யாம்
கலையகம்ஷங்கர் மூவிஸ்
வெளியீடுசனவரி 23, 1976 (1976-01-23)
ஓட்டம்180 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

நாகின் என்பது 1976 ஆண்டு வெளிவந்த ஒரு இந்தித் திரைப்படம் ஆகும். இது மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]

இப்படத்தைத் தழுவி தமிழில் நீயா என்ற திரைப்படம் வெளியானது.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

ஒரு பழங்கதையின் படி, நாகங்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, மனித வடிவம் பெறுவர் என்று கூறப்படுகிறது. இதனால், இந்த திரைப்பட க் கதை, ஒரு ஆண் மற்றும் பெண் நாகம், தங்கள் மனித வடிவங்களில் பாடுவதும் ஆடுவதுமாகத் தொடங்குகிறது. ஆண் நாகம், நாகமாக மாறும் போது, வேட்டையாடுகிற உறுப்பினர்களில் ஒரு நபர் மூலம் சுட்டுக் கொல்லப்படுகிறார், அந்த நபர், ஆண் நாகம் ஒரு பெண்ணைத் தாக்க போவதாக நினைத்ததால் அவ்வாறு செய்தார். மீதமுள்ள கதையில் பெண் நாகம், தன் காதலரின் மரணத்திற்கு காரணமான நண்பர்களின் குழுவைப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது. இறுதியில், விஜய் என்பவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். மேலும் நாகினி அவரைக் கொல்வதற்கு முன்பே இறந்துவிட்டார், பிறகு அவர், தான் செய்தது தவறு என்றும், தன் வாழ்க்கை அழிந்தது போல், தன் பழிவாங்கும் எண்ணத்தால் பலரது வாழ்க்கை பறிபோய்விட்டது என்றும் உணர்கிறார். அவர் இறக்கும் தருவாயில், அவரது காதலன் அவரை வானத்தில் இருந்து அழைத்தார். இறந்த பிறகு அவருடன் சொர்க்கத்தில் மீண்டும் இணைகிறார்.

பாடல்கள்[தொகு]

அனைத்து பாடல்களும் லக்ஷ்மி ப்யார்லேல் இசையமைப்பில் உருவாகியுள்ளது. அனைத்து பாடல்களின் வரிகளையும் வெர்மா மாலிக் எழுதியுள்ளார்.

பதிவு# பாடல் பாடகர்(கள்) நேரம்
1 "தேரே சங்க் ப்யார் மேன் நஹின் தோட்னா" (Solo) லதா மங்கேஷ்கர் 05:08
2 "தேரே இஷ்க் கா முஜ் பே ஹுவா யே அஸர் ஹைன்" மொஹம்மது ரஃபி, ஆஷா போஸ்லே 06:13
3 "தேரே மேரா மேரா தேரா" சுமன் கல்யாண்பூர், கிஷோர் குமார் 07:21
4 "தேரே சங்க் ப்யார் மேன் நஹின் தோட்னா" (Sad Version) லதா மங்கேஷ்கர் 00:47
5 "தேரே மேரே யரானோ" மொஹம்மது ரஃபி, லதா மங்கேஷ்கர் 06:24
6 "தேரே சங்க் ப்யார் மேன் நஹின் தோட்னா" (Duet) மஹேந்த்ர கபூர், லதா மங்கேஷ்கர் 05:42

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகின்_(1976_திரைப்படம்)&oldid=2659376" இருந்து மீள்விக்கப்பட்டது